எல்லா சைவ உணவுகளும் உடலுக்கு நன்மை தருபவை அல்ல!

தாவர உணவு வகைகளுக்கும், இரத்த அழுத்தம், இரத்த லிப்பிடுகள், சர்க்கரை அளவு ஆகியவற்றுக்கும் நேரடியாக நெருங்கிய தொடர்புகள் உள்ளது.

  |  Updated: September 02, 2020 17:56 IST

Reddit
Every Vegetarian Diet May Not Be As Healthy As It Seems - Experts Reveal

கடந்த சில வருடங்களாக பலர் சைவ உணவு வகைகளுக்கு மாறி வருகின்றனர். மாமிச இறைச்சியைக் காட்டிலும், சைவ உணவுகளை எடுத்துக்கொண்டால் உடல் ஆரோக்கியம் மேலோங்கும், சிந்தனைகள் விரிவடையும். இது ஒருபுறம் இருந்தாலும், எல்லா சைவ உணவு வகைகளும் ஆரோக்கியமானது தானா என்றால் கேள்விகுறி தான். 

இது தொடர்பாக ஐரோப்பிய சொசைட்டி ஆஃப் கார்டியாலஜி(ESC) கூட்டமைப்பு 2020, தாவர அடிப்படையிலான உணவுகள் ஆரோக்கியமான உடல்நலனுககான சுகாதாரமான உணவு என்று உத்தரவாதம் அளிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆராயச்சிக்கு 146 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு இரத்த அழுத்தம், இரத்த லிப்பிடுகள் மற்றும் சர்க்கரை அளவு ஆகியவை சீராக இருந்தது. சுமார் பத்து வருடம் அவர்களுக்கு சைவ உணவுகள் வழங்கப்பட்டது. முடிவில், அதில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு இரத்த அழுததம், இரத்த லிப்பிடுகள், சர்க்கரை அளவு அதிகமாக இருந்தது.

இந்தக் காரணிகள் அனைத்தும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்க்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்தது.

இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இருப்பினும் அவை அனைத்தும் தாவர உணவுகள் என்ற உணவுப்பழக்கத்தில் மொத்தமாக இணைகிறது. எனவே, தாவர உணவு வகைகளுக்கும், இரத்த அழுத்தம், இரத்த லிப்பிடுகள், சர்க்கரை அளவு ஆகியவற்றுக்கும் நேரடியாக நெருங்கிய தொடர்புகள் உள்ளது.

Comments

Listen to the latest songs, only on JioSaavn.com

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement