விட்டமின் டி அளவை இனி எளிதாக கண்டறியலாம்...! ஆய்வு சொல்லும் முடிவு இதுதான்

விட்டமின் டி குறைபாட்டினால் மன அழுத்தம், இதய நோய், அலர்ஜி, நீரிழிவு மற்றும் கேன்சர் போன்ற நோய்கள் உருவாக காரணமாகிறது.

   |  Updated: February 25, 2019 15:51 IST

Reddit
Your Hair May Help Determine Your Vitamin D Levels: Eat These 5 Vitamin D-Rich Foods
Highlights
  • விட்டமின் டி குறைபாடுபற்றிய ஆய்வுக்கு இந்தக் கண்டு பிடிப்பு உதவும்
  • இரத்த பகுப்பாய்வு விட்டமின் டி அளவை காலத்திற்கு ஏற்றார்போல் காட்டும்.
  • மனிதர்கள் இறந்த பின்பும் நீண்ட கால இருக்கக் கூடியது முடி, பல் மட்டுமே

உடலில் விட்டமின் டி அளவை நம்முடைய முடிகளை வைத்து அளவிட முடியும். ஊட்டச்சத்து பத்திரிகை வெளியிட்ட இந்த ஆய்வில், விட்டமின் டி குறைபாடுபற்றிய மேம்பட்ட ஆய்வுக்கு இந்தக் கண்டு பிடிப்பு நிச்சயம் உதவும் என்று கூறியுள்ளது. வீட்டமின் டி குறைபாடு என்பது உலகளவில் அதிகமுள்ள குறைபாடாகும். விட்டமின் டி குறைபாட்டினால் மன அழுத்தம், இதய நோய்,  அலர்ஜி, நீரிழிவு மற்றும் கேன்சர் போன்ற நோய்கள் உருவாக காரணமாகிறது. 

அறிவியலாளர்கள், இரத்த பகுப்பாய்வு செய்து விட்டமின் டி அளவை கண்டறியும் போது ஒவ்வொரு சமயமும் ஒவ்வொன்றாக காட்டலாம். ஆனால் முடி வளரும் விதத்தை வைத்து கணக்கிடும் போது சிறப்பாக இதைப் பற்றி வெளிக்காட்டுவதுடன் பருவ கால வேறுபாடுகளைக் ஏற்படும் மாற்றங்களை கண்டறிய முடியும். இரத்ததில் விட்டமின் டி செறிவு அதிகமாக இருக்கும்பொழுது முடியின் வளர்ச்சி என்பது அதிகமாகவே இருக்கும். விட்டமின் டி குறையும்போது முடியின் வளர்ச்சியும் குறைகிறது. எனவே காலப்போக்கில் முடி மாதிரி அடிப்படையில் சோதனை செய்யப்படலாம் என்று தெரிவிக்கின்றனர்.

Newsbeep

 இந்த ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் இரத்தத்தில் உள்ள விட்டமின் டி யின் அளவிற்கும் முடியின் வளர்ச்சிக்கும் உள்ள சரியான உறவை நிரூபிக்க முயற்சிகள் நடந்து வருவதாக தெரிகிறது. எதிர்கால ஆய்வுகள் முடியின் நிறம், முடிக்கு அடிக்கப்படும் கலரிங் போன்றவற்றால் விட்டமின் டி அளவில் மாறுபாடுகள் ஏற்படுமா…? என்பதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும்  என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். 

Listen to the latest songs, only on JioSaavn.com

இந்த கண்டுபிடிப்பு, மனிதர்கள் இறந்த பின்பும் நீண்ட கால இருக்கக் கூடியது முடி மற்றும் பல் மட்டுமே என்பதால் முடியை அடிப்படையாக வைத்து விட்டமின் டியின் நிலை குறித்து மதிப்பீடு செய்ய முடியும்.  பழங்கால மக்களான எலிசபெத்தன்ஸ், வைக்கிங்க், செல்ட்ஸ், ரோமன்ஸ், எகிப்தியர்கள் ஆகியோரை இதற்கு உதாரணமாக கூறியுள்ளனர். 

விட்டமின் டி அதிகமுள்ள உணவுகள் விட்டமின் டி எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை நிர்வகிக்கும் மிக முக்கிய ஊட்டச்சத்தாகும். சூரிய ஒளியில் விட்டமின் டி நிறைந்துள்ளது. ஆனால் உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறையில் நான்கு சுவர்களுக்குகுள்ளவே வாழ்வதால் விட்டமின் டி குறைபாடு என்பது இயல்பானதே ஆகும். விட்டமின் டி குறைபாடு உள்ளவர்கள் காய்கறி, பழங்கள், பால் சார் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். காளான், ஆரஞ்சு ஜூஸ், பால், சால்மன் மீன், சீஸ் ஆகியவற்றில் விட்டமின் டி நிறைந்துள்ளது. 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
Tags:  Vitamin DHair

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement