பாஸ்தா உடல் எடையை ஆதிகரிக்காது: ஆய்வு முடிவு

பல வருடங்களாக நாம் கேட்டு வருவது பாஸ்தாவில் கார்போஹைடிரேட் நிறைந்து இருப்பதால் இது உடலை குண்டாக்கும் என்பது தான்.

एनडीटीवी फूड डेस्क  |  Updated: June 07, 2018 12:05 IST

Reddit
Pasta May Not Result In Weight Gain: Study

உங்களுக்கு பிடித்த பாஸ்தா உங்களை குண்டாக்கும் என தவிர்த்து வந்தீர்களா? இப்பொழுது அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். பலருக்கு பிடித்த உணவான பாஸ்தாவை உண்டால் உடல் பருமன் ஆகாது. பல வருடங்களாக நாம் கேட்டு வருவது பாஸ்தாவில் கார்போஹைடிரேட் நிறைந்து இருப்பதால் இது உடலை குண்டாக்கும் என்பது தான். ஆனால் பாஸ்தாவில் கிளைசமிக் மிக குறைவாக இருப்பதால் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பவர்கள் கூட இதை உண்ணலாம் என தெரியவந்துள்ளது. 

புனித மைக்கில் மருத்துவமனை நடத்திய ஆய்வில், ரத்த ஓட்டத்தில் விரைவாக உறிஞ்சும் சுத்தகரிக்கப்பட்ட கார்போஹைடிரேட் போல் இல்லாமல் பஸ்தாவில் கிளைசமிக் மிக குறைவாக காணப்படுகிறது. இது உடலின் சக்கரை அளவை மற்ற உணவுகள் போல் அதிகரிக்காது.

2500 மக்கள் பங்கேற்ற இந்த ஆய்வில் மற்ற கார்போஹைடிரேட் எடுத்துக் கொண்டவர்களை விட பாஸ்தா உண்டவர்கள் சக்கரை அளவு குறைவாக உள்ளது என அறியப்பட்டுள்ளது. அதனால் லோ டையடில் பாஸ்தாவை நிச்சயம்இணைத்துக் கொள்ளலாம்.

ஆய்வில் பங்கேற்ற மக்கள் ஒரு வாரத்திற்கு மற்ற கார்போஹைடிரேட் உணவுக்கு பதில் 3.3 கப் பாஸ்தாவை எடுத்துக் கொண்டனர். ஆய்வின் முடிவில் 12 வாரத்தில் 1.5கிலோ இடை குறைந்தனர்.

Commentsபாஸ்தாவுடன் இணைந்து சாப்பிடப்படும் மற்ற ஜங் உணவுகள் எடை கூட செய்யும். அதனால் உடலுக்கு ஏற்றவாறு உண்பது சிறந்தது. உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement