பழங்களை அப்படியே சாப்பிடுவது நல்லதா? ஜூஸ் போட்டு குடிப்பது நல்லதா?

பழங்களை ஜூஸ் போட்டு குடிப்பதைக் காட்டிலும், அப்படியே சாப்பிடுவது தான் நன்மை அளிக்கும்.

  |  Updated: August 03, 2020 18:29 IST

Reddit
Eating Fruits Or Drinking Fruit Juice - What Is Better? Here's What Expert Says

பழ ஜூஸ் நல்லதா கெட்டதா?

Highlights
  • Fruit juice or whole fruit - don't know what's better?
  • Nutritionist Rujuta Diwekar gives her suggestions.
  • Here's what the expert had to say about drinking fruit juice.

பொதுவாக ஆரோக்கியம் மேல் அக்கறையுள்ள அனைவருக்கும் இந்த சந்தேகம் இருக்கும். பழங்களை அப்படியே சாப்பிட்டா நல்லதா அல்லது ஜூஸ் போட்டு குடிப்பது நல்லதா? 

உணவு வகைகளைப் பொறுத்தவரையில் பழங்களில் அதிகப்படியான சத்துகள் உள்ளன. அதிலும் குறிப்பாக நமது நாட்டில் விளையும் பழங்களில் நீர்ச்சத்தும், புரதச்சத்தும் மிகுந்த காணப்படுகிறது. உடற்பயிற்சி செய்பவர்கள், வெளியில் வேலை செய்பவர்கள் அடிக்கடி ஜூஸ் குடித்தால் உடலுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும். அதிலும் சிலர் ஐஸ் போடாமல் ஜூஸ் குடிக்க மாட்டார்கள்.

பழங்களைக் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் தனது சமூகவலைதள பக்கங்களில் சில அறிவுரைகளை கூறுகிறார். அதன்படி, பொதுவாக ஜூஸ் போட்டு குடிப்பதைக் காட்டிலும் பழத்தை அப்படியே கடித்து சாப்பிட்டால்தான் அதிலுள்ள சத்துக்கள் அப்படியே நமக்கு கிடைக்கும் என்கிறார்.

ஜூஸ் போட்டு குடிப்பதாக இருந்தால், ஃபிரஷ் ஜூஸ் குடிக்கலாம். ஆனால், பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் ஜூஸ்களை மட்டும் குடிப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்கிறார். ஏனெனில், பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் ஜூஸ்களில் செயற்கை சுவையூட்டிகள் பயன்படுத்தப்படலாம்.

இயற்கையான கண்முன் தயாரிக்கப்படும் ஜூஸ்கள் உடல்நலத்துக்கு ஏற்றது. குறிப்பாக வயதானவர்கள், சர்க்கரை நோயுள்ளவர்கள், உடல் பருமன் கொண்டவர்கள், இதய நோய் உள்ளவர்கள் பழத்தை ஜூஸ் போட்டும் குடிக்கலாம். அப்படியே துண்டுகளாக வெட்டியும் சாப்பிடலாம்.

A post shared by Rujuta Diwekar (@rujuta.diwekar) on

Listen to the latest songs, only on JioSaavn.comசுருக்கமாக சொல்லப்போனால் பழங்களை ஜூஸ் போட்டு குடிப்பதைக் காட்டிலும், அப்படியே சாப்பிடுவதுதான் நன்மை அளிக்கும். இருப்பினும், சில சந்தர்ப்பங்களில் ஜூஸ் போட்டும் குடிக்கலாம். அவை, 

1. வீட்டில் அதிகமாக உணவு வீணாகும் போது
2. பழங்கள் சாப்பிட நேரம் இல்லாத போது
3. பசியின்மை இருக்கும் போது 

 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement