பூசணிக்காய் சிப்ஸ் சாப்பிட்டால் உடல் எடை குறையும்!! எப்படி என்று பார்ப்போமா!!

பூசணிக்காயில் கொழுப்பு மற்றும் கலோரிகள் முற்றிலுமாக இல்லை.  100 கிராம் பூசணிக்காயில் 26 கிராம் கலோரிகள் உள்ளது.  பூசணிக்காயில் நார்ச்சத்து இருப்பதால் உங்களை நாள் முழுக்க நிறைவாக வைத்திருக்கும்.  

Translated by: Kamala Thavanidhi  |  Updated: July 29, 2019 17:42 IST

Reddit
Weight Loss Diet: This Low-Cal, Roasted Pumpkin (Kaddu) Snack Is Ideal For Dieters
Highlights
  • கலோரிகள் அற்ற காய்கறிகளுள் பூசணிக்காயும் ஒன்று.
  • டயட்டில் இருப்பவர்களும் இதனை சாப்பிடலாம்.
  • ருசியில் அலாதியாக இருக்கும் இந்த ரெசிபியை வீட்டிலேயே செய்து பாருங்கள்.

பூசணிக்காயில் நீர்ச்சத்து மற்றும் இனிப்பு சுவை அதிகமாக இருப்பதால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம்.  இந்த காய் மட்டுமல்லாமல் அதன் விதையிலும் உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியிருக்கிறது.  இந்த பூசணிக்காயை கொண்டு ஐஸ்கிரீம், ஸ்மூத்தி மற்றும் அல்வா தயாரிக்கலாம்.  உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம்.   

5msu8g4o

 

நன்மைகள்: 
பூசணிக்காயில் கொழுப்பு மற்றும் கலோரிகள் முற்றிலுமாக இல்லை.  100 கிராம் பூசணிக்காயில் 26 கிராம் கலோரிகள் உள்ளது.  பூசணிக்காயில் நார்ச்சத்து இருப்பதால் உங்களை நாள் முழுக்க நிறைவாக வைத்திருக்கும்.  செரிமான மண்டலத்தை சீராக வைத்திருக்க இதனை சாப்பிடவது நல்லது.  பொட்டாஷியத்தின் அளவு அதிகமாக இருப்பதால் உடல் எடை குறைக்க உதவும்.  

gpnr44po

 

எப்படி தயாரிக்கலாம்: 
துளசி, பூண்டு, பட்டை பொடி, பூசணிக்காய் ஆகியவற்றை சேர்த்து ஆலிவ் எண்ணெயில் பொரித்து எடுத்து சாப்பிடலாம்.  இதில் இயற்கையாகவே இனிப்பு சுவை இருப்பதால் சர்க்கரை சேர்க்க தேவையில்லை.  வேண்டுமானால் நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்.  

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com