ஓட்ஸில் கூழ் செய்து குடிக்கலாமா?

குடைமிளகாய், சூக்கினி, செர்ரி டொமேட்டோ, கடுகு, கறிவேப்பிலை, மிளகு, உப்பு சேர்த்து வறுத்த ஓட்ஸ் சேர்த்து கூழ் செய்து சாப்பிடலாம். 

Translated by: Kamala Thavanidhi  |  Updated: August 30, 2019 21:36 IST

Reddit
High-Protein Breakfast: This Oatmeal Porridge With Fried Egg Is The Perfect Combo Of Taste And Health

நீண்ட நேரம் உட்கார்ந்தபடியே வேலை, உடற்பயிற்சியின்மை, ஒழுங்கற்ற உணவு பழக்கம் போன்றவை உடல் ஆரோக்கியத்தை கெடுக்க வல்லது.  மிக எளிதில் நோய் தொற்று ஏற்பட இதுபோன்ற ஒழுங்கற்ற வாழ்வியல் முறைதான் காரணம்.  நாள் ஒன்றிற்கு தேவையான சத்துக்களை தரக்கூடிய உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வரலாம்.  இதனால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைத்து உடல் உறுப்புகள் அனைத்துமே சீராக இயங்கும்.  காலை உணவாக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கூழ் குடிக்கலாம்.  

 

l2b44hqo
 

புரதம், கொழுப்பு, வைட்டமின், தாதுக்கள், நார்ச்சத்து என அனைத்து விதமான சத்துக்களும் இருக்கக்கூடிய உணவுகளை சாப்பிடும்போது உடல் சீராக வேலை செய்வதுடன் ஆரோக்கியமாகவும் இருக்கும்.  இதனால் உடல் எடையும் சீராக இருக்கும்.  நாள் முழுக்க நிறைவாகவும் உணர முடியும்.   புரதம் என்பது உடல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவக்கூடியது.  தசைகள் மற்றும் எலும்புகளின் இயக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் புரதம் பெரிதும் உதவுகிறது.  

நைட்ரோஜன், ஆக்ஸிஜன், கார்பன் மற்றும் ஹைட்ரோஜன் போன்றவையெல்லாம் சேர்ந்ததுதான் புரதம்.  உடலுக்கு தேவையான புரதம் கிடைக்கும்போதுதான் தசைகள் ஆரோக்கியமாகவும், உறுதியாகவும் இருக்கும்.  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை புரதத்திற்கு உண்டு.  காலை உணவில் புரதம் நிறைந்த உணவுகளை சேர்த்து கொள்ளலாம்.  புரதம் நிறைந்த உணவுகளுள் ஓட்ஸ் முக்கியமானது.  நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் செரிமான பிரச்னைகள் இருக்காது.  மேலும் வைட்டமின் ஏ, ரிபோஃப்ளேவின், மக்னீஷியம், பொட்டாஷியம் போன்ற சத்துக்களும் இருக்கிறது.  

குடைமிளகாய், சூக்கினி, செர்ரி டொமேட்டோ, கடுகு, கறிவேப்பிலை, மிளகு, உப்பு சேர்த்து வறுத்த ஓட்ஸ் சேர்த்து கூழ் செய்து சாப்பிடலாம்.  இதனை பொரித்த முட்டையுடன் சேர்த்து சாப்பிட இன்னும் ருசியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.  காலை உணவு முழு ஆரோக்கியம் நிறைந்ததாக இருந்தால் நாள் முழுக்க ஆற்றலுடன் இருக்க முடியும் என்பதால் இதனை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.  

Listen to the latest songs, only on JioSaavn.com

 

 

 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement