உடல் எடை குறைக்கும் லோ கலோரி சாலட்!!!

உங்கள் சாலட் இன்னும் சுவையாக இருக்க வெள்ளரி, முளைக்கட்டிய பயறுகள், சீஸ் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து கொள்ளலாம். 

Edited by: Kamala Thavanidhi  |  Updated: May 22, 2019 12:47 IST

Reddit
Low Calorie Foods: Try These Delicious Low Calorie Salads And Dressings For Weight Loss 
Highlights
  • கலோரிகள் குறைந்த உணவுகளே உடல் எடை குறைக்க சிறந்தது.
  • கீரைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளை சாலட்டில் சேர்த்து கொள்ளலாம்.
  • கீரைகள் மற்றும் ஆலிவில் இரும்பு சத்து அதிகம் உள்ளது.

தற்போதைய உலகம் ஆரோக்கியத்தையே பிரதானமாக கொண்டு இயங்கி வருகிறது.  எல்லாவற்றிலுமே ஆரோக்கியம் இருக்க வேண்டும் என்று பார்த்து பார்த்து சாப்பிடும் அதேசமயம் துரித உணவுகளும், புதுமையான நோய்களும் உருவாக ஆரம்பித்துவிட்டன.  ஆனால் தற்போது மக்களிடம் விழிப்புணர்வு வந்துவிட்டது.  குறிப்பிட்ட சில காலத்தில் இருந்தவர்கள் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உயிரையே விலையாக கொடுத்த சோக கதைகளும் உண்டு.  இந்த 21ஆம் நூற்றாண்டில் இருக்கக்கூடியவர்கள் அதுபோன்ற முட்டாள்தனத்தை செய்ய தயாராக இல்லை.  உடல் எடையை குறைக்க நினைத்து இரசாயண உணவுகளையோ அல்லது ஊசிகள், மருந்து மாத்திரைகளையோ சாப்பிடுவதில்லை.  மாறாக அவர்கள், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் முறையான உடற்பயிற்சி செய்ய புரப்பட்டுவிட்டனர் என்பது எவ்வளவு மகிழ்ச்சியளிக்கக்கூடியதாக இருக்கிறது!!உங்களுக்கு எப்படிபட்ட உடல் வேண்டுமோ, அதற்கேற்ற உணவுகளையும், அவற்றை சாப்பிட வேண்டிய நேரத்தையும் பட்டியலிட்டு கொடுக்க நிறைய கைத்தேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர்கள் இருக்கிறார்கள்.  அவர்களிடம் சென்று முறையாக ஆலோசனை பெற்று உங்கள் உடல் எடையை பராமரித்து கொள்ளுங்கள்.  தற்போது உடல் எடை குறைப்பு உணவு பட்டியலில் முதலில் இருப்பது சாலட்.  சாலட்கள் எல்லாமே கலோரிகள் குறைவானது.  பொதுவாக சாலட்கள் கீரைகள், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் கொண்டு தயாரிக்கப்படுவதால் அதில் நார்ச்சத்து நிறைந்திருக்கும்.  அவற்றை சாப்பிடுவதால் உடல் எடை குறையும் வாய்ப்பு அதிகம்.  உங்கள் சாலட் இன்னும் சுவையாக இருக்க வெள்ளரி, முளைக்கட்டிய பயறுகள், சீஸ் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து கொள்ளலாம்.  இங்கே சில கலோரிகள் குறைந்த ருசியான சாலட் ரெசிபிகளை பார்ப்போம்.  பேன்ஸனெல்லா:

தக்காளி மற்றும் பிரட் தான் இந்த சாலட்டின் முக்கிய பொருட்கள்.  பிரட்டில் நார்ச்சத்தும், தக்காளியில் வைட்டமின் சி, கே, பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் இருக்கிறது.  சாலட்டில் எலுமிச்சை சாறு அல்லது வினிகர் மற்றும் எண்ணெய் வேண்டாம் என்று நினைத்தீர்களானால் கடைகளில் வினிகரேட் கிடைக்கிறது.  அவற்றை பயன்படுத்தலாம்.  அத்துடன் சில எளிய மூலிகைகளையும் சேர்த்து சாப்பிடலாம்.  u0v8657o

 

கேரட் சாலட் வித் ப்ளாக் க்ரேப் ட்ரெஸ்ஸிங்:

இந்த சாலட் தயாரிப்பிற்கு நீங்களே ட்ரெஸ்ஸிங்கையும் தயாரிக்கலாம்.  கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் கே1, நார்ச்சத்து, ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.  கருப்பு திராட்சையில் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் சருமத்திற்கும், உடல் எடை குறைப்பதற்கும் உதவும்.  

a80hgavg

 

தர்பூசணி, ஆலிவ் மற்றும் ஃப்ட்டா சாலட்:

100 கிராம் தர்பூசணியில் 30 கலோரிகள் மற்றும் 92 சதவிகிதம் தண்ணீர் இருக்கிறது.  இது உங்களை நிறைவாக வைத்திருப்பதோடு ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.  மேலும் இதில் வைட்டமின் ஏ, சி, பி6, லைக்கோபீன் மற்றும் அமினோ அமிலம் இருப்பதால் ஆரோக்கியமான மற்றும் பளபளக்கும் சருமம் கிடைக்கிறது.  ஆலிவில் இரும்பு சத்து அதிகம் உள்ளது என்பதால் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கிறது. watermelon salad

 

வெள்ளரி, ஆலிவ் மற்றும் புதினா சாலட்:

Listen to the latest songs, only on JioSaavn.com

வெள்ளரியில் நீர்ச்சத்து அதிகம் ஆனால் கலோரிகள் குறைவு.  புதினா, ஆலிவ் மற்றும் வெள்ளரி சேர்த்து தயாரிக்கப்படும் இந்த சாலட் மிகவும் ஆரோக்கியமானது.  உடலில் இரும்பு சத்தை அதிகரித்து உடல் எடையையும் குறைக்கிறது.  உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement