உடல் எடை குறைக்கும் சிட்ரஸ் ஃப்ரூட் சாலட்!!

உங்கள் சுவைக்கேற்ப வேறு பழங்களையும் சேர்த்து கொள்ளலாம்.  அதிலும் மிகவும் இனிப்பான பழங்களை தவிர்த்திடலாம்.

Translated by: Kamala Thavanidhi  |  Updated: August 20, 2019 13:10 IST

Reddit
Weight Loss: Make This Delicious Citrusy Fruit Salad At Home To Shed Extra Kilos

உடல் எடை குறைக்க ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.  உடல் எடை குறைக்க நம்மில் நிறைய பேர் நிறைய வழிமுறைகளை பின்பற்றி வருகிறார்கள்.  உடல் எடை குறைக்க புரதம் நிறைந்த மற்றும் கலோரிகள் குறைந்த உணவுகளை சாப்பிடலாம்.  உடல் எடை குறைப்பு குறித்து நாம் நிறைய அறிவுரைகளை கேட்டிருப்போம்.  ஆனால் அவற்றை பின்பற்றுவதுதான் சற்றே சிரமமான விஷயம்.  அனைவராலும் செய்யக்கூடிய எளிமையான வழிமுறைகளை தெரிந்து கொள்வோம்.   

கலோரிகளை குறைக்க: 

நீங்கள் சாப்பிடக்கூடிய உணவுகளில் எவ்வளவு கலோரிகள் உள்ளதென்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.  புரதம், கொழுப்பு, தாதுக்கள், வைட்டமின் போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளை சம அளவில் எடுத்து கொண்டால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதுடன் ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.  உடல் எடையையும் குறைக்கலாம்.  

பதப்படுத்தப்பட்ட உணவு: 

செயற்கை இனிப்பு, நிறம், சுவை சேர்க்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பதால் உடல் எடை நிச்சயம் குறையும்.  பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சோடியம் அதிகமாக இருப்பதால் உடல் ஆரோக்கியத்தை கெடுத்துவிடும். 

சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்: 

நாம் சாப்பிடக்கூடிய கார்போஹைட்ரேட் உணவுகள் எல்லாமே உடலில் சர்க்கரையாய் மாறிவிடும்.  ரிஃபைண்டு சர்க்கரையை பயன்படுத்துவதால் உடலில் நீரிழப்பு ஏற்படுவதுடன் வயிறு உப்புசமும் ஏற்படக்கூடும்.  சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்ப்பதால் உடல் எடை குறைகிறது.  

தூக்கம்: 

திட்டமிடப்பட்ட மற்றும் சம அளவான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதாலும், தினசரி யோகா, ஜாக்கிங், நடைப்பயிற்சி, நடனம் போன்ற உடற்பயிற்சிகளை செய்வதாலும் நிறைய தண்ணீர் குடிப்பதாலும் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது.  தினமும் 7-8 மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.  சிட்ரஸ் பழங்களை கொண்டு சாலட் தயாரித்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்.  கிவி, ஆரஞ்சு, ப்ளம்ஸ், திராட்சை, தேன், வினிகர், பாப்பி சீட், ஆலிவ் ஆயில், உப்பு  மற்றும் மிளது தூள் சேர்த்து அருமையான சாலட் செய்து சாப்பிடலாம்.  இப்படி சாப்பிடும்போது, உடலில் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவை குறைந்து உடல் எடையும் குறையும். 

fruit salad
 

தேவையான பொருட்கள்: 

ப்ளம்ஸ் - 1/2 கப் 

அன்னாசி - 1/2 கப் 

திராட்சை - 1/2 கப் 

ஸ்ட்ராபெர்ரி - 1/2 கப் 

கிவி - 1/2 கப் 

ஆரஞ்சு - 1/2 கப் 

உப்பு - சுவைக்கேற்ப 

மிளகு - சுவைக்கேற்ப 

வினிகர் - 2 மேஜைக்கரண்டி 

தேன் - 2 மேஜைக்கரண்டி 

ஆலிவ் எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி 

பாதாம் - 21/2 மேஜைக்கரண்டி 

செய்முறை: 

ஒரு பெரிய பௌலில் இந்த பழங்களை வெட்டி போட்டு கொள்ளவும்.  நன்கு கலந்து பின் அதில் நறுக்கி வைத்துள்ள பாதாமை சேர்க்கவும்.  

உங்கள் சுவைக்கேற்ப வேறு பழங்களையும் சேர்த்து கொள்ளலாம்.  அதிலும் மிகவும் இனிப்பான பழங்களை தவிர்த்திடலாம்.

இந்த ஃப்ரூட் சாலட் உங்களை நாள் முழுக்க நிறைவாக வைத்திருப்பதுடன், உடல் எடை குறைக்கவும் உதவும்.  இதில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இருப்பதுடன், கலோரிகளும் குறைவாக இருக்கிறது.  Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com