மக்னீஷியம் பற்றாக்குறையை போக்க இவற்றை சாப்பிடுங்கள்!!!

மீனில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், மக்னீஷியம் இருப்பதால் அடிக்கடி மீனை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.  

Translated by: Kamala Thavanidhi  |  Updated: June 14, 2019 15:26 IST

Reddit
Magnesium-Rich Foods: Foods You Must Eat To Avoid Magnesium Deficiency
Highlights
  • ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் மக்னீஷியம் தேவையானது.
  • உடல் உறுப்புகள் சரிவர இயங்குவதற்கு மக்னீஷியம் முக்கியமானது.
  • மக்னீஷியம் குறைபாட்டால் தலைவலி, குமட்டல் போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன.

ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்.  கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, வைட்டமின் மற்றும் மினரல் போன்ற சத்துக்கள் அடங்கிய உணவுகளை சம அளவு சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும்.  நாம் சாப்பிடக்கூடிய உணவுகளில் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைத்துவிடுவதில்லை.  இதன் காரணமாக மக்னீஷியம், இரும்புச்சத்து போன்றவை உடலுக்கு சரிவர கிடைக்காமல் போவதால் சில குறைபாடுகள் ஏற்படுகின்றன.  உடல் ஆரோக்கியமாக இயங்க மக்னீஷியம் மிகவும் முக்கியமானது.  இது தசைகள் மற்றும் எலும்புகளை வலுவாக வைக்கிறது.  மக்னீஷியம் குறைபாட்டால் மூளை மற்றும் இருதய ஆரோக்கியம் கெட்டு பல நோய்கள் உருவாகிறது.  மேலும் மலச்சிக்கல், தூக்கமின்மை, ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோய் போன்றவற்றை தடுக்க உடலுக்கு மக்னீஷியம் தேவை.  இது மட்டுமின்றி உடலில் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரையை சீராக வைக்க மக்னீஷியம் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.  

மக்னீஷியம் பற்றாக்குறையின் அறிகுறி: 
உடலுக்கு மக்னீஷியத்தின் குறைபாடு ஏற்பட்டால் உடல் தானாகவே வெளிக்காட்டும்.  குமட்டல், சோர்வு, எரிச்சல், தசைகளில் பிடிப்பு, பதட்டம், சீரற்ற இருதய துடிப்பு, தூக்கமின்மை போன்ற உடல் உபாதைகள் ஏற்படும்.  இந்த பிரச்சனைகளை போக்க மக்னீஷியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.  

பருப்பு வகைகள்: 
கொண்டைக்கடலை, பட்டாணி, சோயா பீன்ஸ், சுண்டல் போன்றவற்றில் புரதம் மட்டுமின்றி, மக்னீஷியமும் நிறைந்திருக்கிறது.  இதனை சாலட் போன்றோ அல்லது வேகவைத்தோ சாப்பிடலாம்.  
 

chickpeas 620

 

டோஃபு: 
புரதம் நிறைந்த டோஃபுவை தினமும் சாப்பிடலாம்.  மேலும் மக்னீஷியம் பற்றாக்குறை இருப்பவர்களும் டோஃபு சாப்பிடலாம். 


கீரைகள்:
கீரையில் நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் மக்னீஷியம் இருப்பதால் சூப், சாலட் செய்து வாரத்தில் மூன்று நாட்கள் சாப்பிடலாம்.  கொண்டைக்கடலை, கீரை ஆகியவற்றில் வினிகர் சேர்த்து சாப்பிடலாம்.  


m70im248

 

டார்க் சாக்லேட்: 
டார்க் சாக்லேட்டில் உடலுக்கு உடனடியாக ஆற்றல் தரக்கூடிய ஆற்றல் உள்ளதால் சோர்வு ஏற்படும்போது உடனே ஒரு டார்க் சாக்லேட் சாப்பிடலாம்.  மேலும் இதில் மக்னீஷியம் மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.  


மீன்:
மீனில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், மக்னீஷியம் இருப்பதால் அடிக்கடி மீனை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.  


Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement