இரவில் சாதம் மீந்து போனால், அடுத்த நாள் காலை உணவுக்கு பராத்தாக்கள் செய்யலாம்!

மீதமிருக்கும் சாதத்துடன் தயிர், கோதுமை மாவு மற்றும் சில மசாலா சேர்த்து, பராத்தக்கள் செய்யலாம்.

  |  Updated: May 08, 2020 13:35 IST

Reddit
Indian Cooking Tips: How To Turn Leftover Rice Into Paratha!

மீதமுள்ள சாதத்தில் பராத்தா செய்முறை: மீதமுள்ள சாதத்தை அடுத்த உணவில் எளிதாக உட்கொள்ளலாம்.

Highlights
  • மீதமுள்ள சாதத்தை ஒரு சுவாரஸ்யமான மற்றும் சுவையான உணவாக மாற்றவும்
  • இந்தப் பராத்தாவிற்கு மீதமுள்ள சாதத்தில் தயிர், அட்டா, மசாலா சேர்க்கவும்.
  • தயிருடன் சூடாக பரிமாறவும்

உணவுக்கு சாப்பிட்ட பிறகு மீதமுள்ள உணவு என்பது ஒவ்வொரு வீட்டிலும் ஒரு வழக்கமான விவகாரம். அந்த அனைத்து உணவுப் பொருட்களிலும், சாதம் மிகவும் பொதுவான உணவுகளில் ஒன்றாகும். நீங்கள் கவனித்தால், நாம் ஒவ்வொரு முறையும் சாதம் அதிகமாகச் சமைக்க முனைகிறோம். அந்த மீதமுள்ள சாதத்தை நீங்கள் என்ன செய்கிறீர்கள்? மீதமுள்ள சாதத்தை அடுத்த உணவில் எளிதாக உட்கொள்ளலாம்; ஆனால் இரண்டு உணவுகளில் ஒரே மாதிரியான உணவை சாப்பிடுவது சில நேரங்களில் சலிப்பை ஏற்படுத்தும். அந்த சமயங்களில், நீங்கள் சில அடிப்படை பொருட்களை எளிதாகச் சேர்த்து, மீதமுள்ள சாதத்தை ஒரு சுவாரஸ்யமான மற்றும் சுவையான உணவாக மாற்றலாம்.

ஆரோக்கியமான காலை உணவுக்கு, மீதமுள்ள சாதத்தை மிருதுவான பராத்தாக்களாக மாற்றக்கூடிய எளிதான செய்முறையை இங்கே நாங்கள் உங்களுக்குக் கொண்டு வருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், மீதமிருக்கும் சாதத்துடன் தயிர், கோதுமை மாவு மற்றும் சில மசாலா சேர்த்து, பராத்தக்கள் செய்யலாம். செய்முறைக்கு நாங்கள் எளிய வேகவைத்த அரிசியைப் பயன்படுத்தினோம், ஆனால் நீங்கள் அதை ஜீரா சாதம், புலாவ், கிச்சடி, எலுமிச்சை சாதம் போன்றவற்றிலும் செய்யலாம்.

ncsa45so

தேவையான பொருட்கள்:

அரிசி- 1 கிண்ணம்

கோதுமை மாவு- 1/4 கப்

தயிர்- அரை கப்

வெங்காயம்- 1 (நறுக்கியது)

பச்சை மிளகாய்- 1 (நறுக்கியது)

அஜ்வைன்- அரை டீஸ்பூன்

வறுத்த ஜீரா தூள்- அரை டீஸ்பூன்

வறுத்த சிவப்பு மிளகாய்த் தூள்- அரை டீஸ்பூன்

ஃபிரஷ் கொத்தமல்லி இலைகள்- 1 டீஸ்பூன் (நறுக்கியது)

உப்பு (முன்னுரிமை கருப்பு உப்பு) - சுவைக்கு ஏற்ப

செய்முறை:

1. மீதமுள்ள சாதத்தை எடுத்து தயிர், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, அஜ்வைன், ஜீரா பவுடர், சிவப்பு மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும். நீங்கள் சிறிது சர்க்கரையும் சேர்க்கலாம். மசாலாவை சுவைக்கு ஏற்ப சரிசெய்யவும்.

2. இப்போது, ​​சாதம்-தயிர் கலவையில் கோதுமை மாவு சேர்த்து ஒரு மென்மையான மாவாகப் பிசையவும். உங்களுக்குத் தேவைப்பட்டால் மேலும் கோதுமை மாவு சேர்க்கலாம். பிசைவதற்குத் தண்ணீர் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். மாவை ஈரமான துணியால் மூடி 10-15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

3. மாவை எடுத்து சிறிய பந்துகளை உருவாக்கி, (சப்பாத்தி பலகை பயன்படுத்தி) மெதுவாகத் தேய்க்கவும். மாவு மிகவும் மென்மையாக இருந்தால், நீங்கள் கைகளைப் பயன்படுத்தி ரோல் செய்யலாம். 

4. ஒரு கடாயைச் சூடாக்கி, சிறிது எண்ணெய் அல்லது நெய் சேர்த்து, குறைந்த தீயில், பராத்தாவை அதில் போட்டுச் சுடவும்.

5. ஒரு பக்கம் சமைத்த பிறகு அதை மறுபக்கம் திருப்பிப் போடவும். பராத்தா சமைக்கும்போது தங்கப் பழுப்பு நிறமாக மாறும். இருபுறமும் நன்றாகச் சமைக்கவும்.

பராத்தக்கள் தயாரானதும் சூராகப் பரிமாறவும். இதை மதிய உணவுக்கோ அல்லது பிறகு சாப்பிடவோ பயன்படுத்த வேண்டாம். சூடாகச் சாப்பிடுவது சிறந்தது.

Listen to the latest songs, only on JioSaavn.com

இந்த ரெசிபியை ட்ரை செய்து, உங்களுடைய கருத்துக்களை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement