மலபார் ஃபிஷ் கறி ரெசிபி (Malabar Fish Curry Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
மலபார் ஃபிஷ் கறி
 • சமையல்காரர்: Saurabh Srivastava - Aloft New Delhi Aerocity
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

சுவையான மீனுடன் தேங்காய் பால் சேர்த்து செய்யக்கூடிய மலபார் ஃபிஷ் கறி டின்னர் பார்ட்டிகளுக்கு ஏற்ற உணவாகும். இதை அனைவரும் விரும்பி சாப்பிடும் படி எப்படி செய்வது என்று பார்ப்போம்.

மலபார் ஃபிஷ் கறி சமைக்க தேவையான பொருட்கள்

 • 40 கிராம் கொத்தமல்லி விதை
 • 60 கிராம் சிவப்பு மிளகாய்
 • 10 மில்லி லிட்டர் தேங்காய் எண்ணெய்
 • 1 கிராம் கடுகு
 • 10 கிராம் வெங்காயம், நறுக்கப்பட்ட
 • 3-4 எண்ணிக்கை கறிவேப்பிலை
 • 20 மில்லி லிட்டர் தேங்காய் பால்
 • 5 மில்லி லிட்டர் புளி கரைசல்
 • 5 கிராம் கொத்தமல்லி, நறுக்கப்பட்ட
 • 120 கிராம் மீன்

மலபார் ஃபிஷ் கறி எப்படி செய்வது

 • 1.மிளகாய் மற்றும் தனியாவை 3 முதல் 4 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
 • 2.அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில், அதை கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளவும்.
 • 3.ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை ஊற்றவும்.
 • 4.எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்.
 • 5.வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், அதில் வடிகட்டி வைத்து பேஸ்ட் மற்றும் மீன் துண்டுகளை போடவும்.
 • 6.சிறிது நேரம் கழித்து தேங்காய் பால் மற்றும் புளி கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.
 • 7.இறுதியாக கறிவேப்பிலை கொத்தமல்லி தூவி இறக்கினால் தயார்.
Key Ingredients: கொத்தமல்லி விதை, சிவப்பு மிளகாய், தேங்காய் எண்ணெய், கடுகு, வெங்காயம், கறிவேப்பிலை, தேங்காய் பால், புளி கரைசல், கொத்தமல்லி, மீன்
Comments

Advertisement
Advertisement