இரத்த அழுத்தத்தை குறைக்கும் ஓட்ஸ் ரெசிபி!!

ஆப்பிள், ஓட்ஸ், கம்பு ஆகியவை சேர்த்து செய்யப்படும் இந்த டெசர்ட் ரெசிபியில் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது.  இவை அனைத்துமே இருதயத்திற்கு சிறந்த உணவு.  

Written by: Kamala Thavanidhi  |  Updated: September 19, 2019 17:09 IST

Reddit
High Blood Pressure Diet: 4 Oat Recipes That You Could Add To Your High Blood Pressure Diet
Highlights
  • ஓட்ஸில் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது.
  • உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் உப்பு சேர்ப்பதை குறைக்க வேண்டும்.
  • நார்ச்சத்து நிறைந்த உணவை சாப்பிடுவதால் இருதய ஆரோக்கியம் சீராக இருக்கும்.

உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் சாப்பிடக்கூடிய உணவில் கவனமாக இருத்தல் வேண்டும்.  சோடியம், கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதால் உடலில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.  ஆகையால் இதுபோன்ற உணவுகளை தவிர்த்து, நார்ச்சத்து மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்த கீரைகள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை சாப்பிடலாம்.  பொட்டாஷியம் நிறைந்த உணவுகளை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் இருதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  உயர் இரத்த அழுத்தத்திற்கு சிறந்த உணவு ஓட்ஸ்.  ஓட்ஸில் புரதம், நார்ச்சத்து, பொட்டாஷியம் ஆகிய சத்துக்கள் இருக்கிறது.  100 கிராம் ஓட்ஸில் 486 மில்லிகிராம் பொட்டாஷியம் இருக்கிறது.  ஓட்ஸ் கொண்டு ஆரோக்கியமான ரெசிபிகளை எப்படி தயாரிக்கலாம் என்று பார்ப்போம். 

ஓட்ஸ் இட்லி:

அரிசி மாவு கொண்டு வழக்கமாக தயாரிக்கப்படும் இட்லியை தவிர்த்து ஓட்ஸ் கொண்டு இட்லி தயாரிக்கலாம்.  இதில் கலோரிகள் குறைவு.  காலை நேரத்தில் இந்த ஓட்ஸ் இட்லி சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். nvuj24ao
 

 

ஓட்ஸ் கிச்சடி:

ஓட்ஸ், பாசிப்பருப்பு, சீரகம், தக்காளி, பட்டாணி போன்றவற்றை சேர்த்து சுவையான கிச்சடி தயாரிக்கலாம்.  மதிய உணவு அல்லது இரவு உணவாக இதனை சாப்பிட்டு வரலாம்.  சட்னி, யோகர்ட்டுடன் சேர்த்து சாப்பிடலாம்.  விரும்பினால் ஊறுகாய் சேர்த்து சாப்பிடலாம். oats khichdi
 

வாழைப்பழம் மற்றும் பாதாம் கூழ்:

வாழைப்பழத்தில் பொட்டாஷியம் நிறைந்திருக்கிறது.  பாதாம் சாப்பிடுவதால் இருதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  இவை இரண்டும் சேர்த்து செய்யப்படும் ரெசிபியை மதிய உணவாக சாப்பிடலாம்.  இதனுடன் ஓட்ஸ் மற்றும் பழங்கள் சேர்த்தும் சாப்பிடலாம். 4im8njr
 

கம்பு ஆப்பிள் க்ரம்பிள்:

ஆப்பிள், ஓட்ஸ், கம்பு ஆகியவை சேர்த்து செய்யப்படும் இந்த டெசர்ட் ரெசிபியில் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது.  இவை அனைத்துமே இருதயத்திற்கு சிறந்த உணவு.  

80io8gdo


 

Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com