5 வகையான உப்புமா... ஒவ்வொன்றும் தனிச்சுவை! 30 நிமிடத்தில் செய்யலாம்!!

நாவிற்கு சுவையாக, ஐந்து விதமான உப்புமா வகைகளைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

  |  Updated: July 23, 2020 15:03 IST

Reddit
Indian Breakfast Recipes: 5 Upma Recipes To Try At Home In 30 Minutes

வெறும் 30 நிமிடத்தில் சுவையான, விதவிதமான உப்புமா செய்யலாம்

Highlights
  • Upma is a classic Indian breakfast that is light on the stomach
  • It is quick, easy, delicious and has many different variations
  • Here are 5 spectacular upma recipes you can try at home

பலருக்கும் உப்புமா என்றாலே பெரும் அலர்ஜிதான். ஆனால், உண்மையில் சொல்லப்போனால் உப்புமா என்பது ஒரு சிறந்த ஆரோக்கியமான  செரிமானம் ஆகக் கூடிய உணவாகும். விரதம் மேற்கொள்பவர்களும், டயட்டில் இருப்பவர்களும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும் உப்புமா சாப்பிடலாம். அந்தவகையில் நாவிற்கு சுவையாக, ஐந்து விதமான உப்புமா வகைகளைப் பற்றி இங்கு பார்க்கலாம். 

1. பச்சை பட்டாணி உப்புமா:
பச்சை மிளகாய், கருவேப்பிலை, கடுகு, ரவை, இஞ்சி மற்றும் பச்சை பட்டாணி இவை அனைத்தையும் சேர்த்து சூப்பரான உப்புமா செய்யலாம். இதற்கு பச்சை பட்டாணி உப்புமா என்று பெயர். இதில் சற்று அதிகமான பச்சை பட்டாணி இருப்பதால் உப்புமாவின் சுவை, தனி சுவையாக மாறுகிறது. வாரத்தில் ஒருநாள் இதுபோன்று பச்சை பட்டாணி உப்புமா சாப்பிடலாம். இது மிக எளிதான விரைவில் செய்யக் கூடிய உணவாகும்.


2. தினை உப்புமா:
விரத நாட்களில் ஒரு சிறந்த விரத உணவாக தினை உப்புமா கருதப்படுகிறது. இது பார்சா எனும் திணையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக இந்த தினை உப்புமா நவராத்திரி அல்லது பண்டிகை காலங்களில் வெள்ளை அரிசிக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகின்றன. இதில் நமது உடலுக்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின்களும் உள்ளன.


3. சேமியா உப்புமா:
சேமியா உப்புமாவில் வறுத்த வேர்கடலை, முந்திரி, கடுகு, சீரகம் ஆகியவற்றோடு காய்கறிகளும் சேர்க்கப்பட்டு சமைக்கப்படுகிறது. இந்த வகையான சேமியா உப்புமா கிட்டத்தட்ட நூடுல்ஸ் போன்று இருக்கும். தேவைப்பட்டால் சிறிது மசாலா பொருட்களை சேர்த்துக் கொண்டால் நல்ல சுவையாக இருக்கும். இது மதிய உணவுக்கும் ஏற்றதாகும்.

Listen to the latest songs, only on JioSaavn.com

gpu94eo8

4. ரவா உப்புமா: 
இது அனைவரும் அறிந்ததே. வெறும் வறுத்த ரவையை கொண்டு சிறிது  நறுக்கிய காய்கறித் துண்டுகள், பயறு, முந்திரி, கறிவேப்பிலை போன்றவற்றைச் சேர்த்து செய்யப்படும் பாரம்பரிய உப்புமா வகையாகும். ஒரு சிலருக்கு இந்த உப்புமா பிடிக்காது. ஆனால் இதில் தேங்காய், நெய் சேர்த்து சாப்பிடும்போது நாக்கில் எச்சில் ஊறும்.

qtjbdllo

5. பிரட் உப்புமா
சில ரொட்டித் துண்டுகளை வைத்து செய்யக்கூடிய உப்புமாதான் பிரட் உப்புமா. இதில் புரோட்டின் சுவையும் அதன் வெண்ணையின் வாசமும் இருப்பதால் இந்தவகையான உப்புமா பலருக்கும் புதிதாக இருக்கும்.  பிரெட்டை சிறுசிறு துண்டுகளாக வெட்டி அவற்றுடன் காய்கறிகள் மசாலாக்கள் போன்றவை சேர்த்து வதக்க வேண்டும். பின்பு அத்துடன் வறுத்த முந்திரிப் பருப்புகள் சேர்த்து, மல்லி இலை கறிவேப்பிலை ஆகியவற்றை தூவி பரிமாறலாம். இந்த உப்புமா மற்ற உப்புமாக்களை விட அருமையாக இருக்கும்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

சம்பந்தமுள்ள கட்டுரைகள்:
Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement