சீரகம், கொத்தமல்லி, வெந்தயம் – இவற்றின் ஆரோக்கிய நன்மைகள் என்ன??

கொத்தமல்லி, சீரகம், வெந்தயம் ஆகியவற்றில் ஏராளமான நன்மைகள் அடங்கியிருக்கிறது.

Edited by: Kamala Thavanidhi  |  Updated: March 13, 2019 18:37 IST

Reddit
Coriander, Cumin And Fenugreek: Add These Three Spices To Your Diet For Healthy Living
Highlights
  • கொத்தமல்லி, வெந்தயம், சீரகம் ஆகியவற்றில் நன்மைகள் பொதிந்துள்ளன.
  • உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டும்.
  • உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

அஞ்சரை பெட்டியிலேயே ஆரோக்கியம் அடங்கியிருக்கிறது என்று அக்காலத்திலேயே சொல்லி சென்றுள்ளனர்.  குறிப்பாக உணவில் ருசியை சேர்க்கும் மசாலா பொருட்களில் ஆரோக்கியமும் பொதிந்துள்ளது.  கொத்தமல்லி, சீரகம், வெந்தயம் ஆகியவற்றில் எப்பேர்ப்பட்ட நன்மைகள் அடங்கியிருக்கின்றன என்பதை பார்ப்போம். 

கொத்தமல்லி

கொத்தமல்லி, சட்னி, சூப், ஸ்ட்யூ, மற்றும் மற்ற உணவுகளில் சேர்க்கப்படுகின்றன.  இது சமையலில் வாசனையையும், ருசியையும் அள்ளித்தருகிறது.  கொத்தமல்லியில் ஆண்டிஇன்ப்ளமேட்ரி தன்மை இருப்பதால், உடலில் கொலஸ்ட்ராலை குறைக்கிறது.  செரிமானத்தை தூண்டும் வகையில் ஜீரண சுரப்பிகளை சுரக்க செய்கிறது.  இதில் ஆண்டிபாக்டீரியல் தன்மையும் இருப்பதால் உடலில் அபாயகரமான நோய்கள் வராமல் தடுக்கிறது.  ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்திருப்பதால் நரம்பு மண்டலம் பாதிக்காமல் பாதுகாக்கிறது. 

சீரகம்

சீரகத்தில் ஏராளமான நன்மைகள் அடங்கியிருக்கின்றன.  தினமும் காலையில் சிரக தண்ணீரை குடித்து வந்தால் செரிமான பிரச்சனை, மலச்சிக்கல், வயிறு உப்பசம் ஆகியவை சரியாகும்.  மேலும் இந்த சீரக தண்ணீர் உடலில் உள்ள நச்சுக்களை அகற்றுவதோடு கல்லீரலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. 

வெந்தயம்

வெந்தயத்தை உணவில் அடிக்கடி சேர்த்து கொண்டால், உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.  வெந்தயத்தில் முயுசிலஜினஸ் என்ற பொருள் இருப்பதால் இது குடல் பகுதியை நோய்களில் இருந்து பாதுகாக்கும்.  இதன் நறுமணம் உணவின் ருசியை அதிகரிக்கிறது.  இந்த மூன்றையும் உணவில் அடிக்கடி சேர்த்து கொள்வதினால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன.  அதோடு, உடலிலுள்ள நச்சுக்களும் வெளியேற்றப்படுகிறது. 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement