வீட்டிலேயே தயாரிக்கலாம் கற்றாழை மாஸ்க்!

பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு சக்தி கொண்ட கற்றாழை, சரும, தலைமுடி பிரச்சனைகளுக்கு குணநலனாக விளங்குகிறது

एनडीटीवी फूड डेस्क  |  Updated: August 24, 2018 12:19 IST

Reddit
Aloe Vera For Skin And Hair: How To Use It For Skin And Hair Woes

பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு சக்தி கொண்ட கற்றாழை, சரும, தலைமுடி பிரச்சனைகளுக்கு குணநலனாக விளங்குகிறது. வீட்டிலேயே தயாரிக்க கூடிய மருத்துவ குணநலன் கொண்ட பேஸ் பேக்ஸ், தலைமுடி பேஸ்ட் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

aloe vera

சரும ஆரோக்கியத்திற்கான கற்றாழை ஜெல்

  1. கற்றாழை ஜெல், மஞ்சள், தேன், பால், பன்னீர் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். இந்த பேஸ் மாஸ்க்கை முகத்தில் தேய்த்து 20 நிமிடங்களுக்கு பிறகு கழுவவும். உலர்ந்த சருமத்திற்கு இந்த பேஸ் பேக் சிறப்பானது.
  2. முகப்பரு பிரச்சனை உள்ளவர்களும், கற்றாழை ஜெல் தேய்த்து கழுவ வேண்டும்.
  3. வெள்ளரி ஜூஸ், தயிர், கற்றாழை ஜெல் ஆகியவற்றை சேர்த்து முகத்தில் தேய்த்து கொள்ளவும். 20 நிமிடங்களுக்கு பிறகு கழுவவும்.
  4. ஒரு கப் சர்க்கரை, இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு, கற்றழை ஜெல் ஆகியவற்றை சேர்த்து முகத்தில் தேய்க்கவும். இதனால், முகத்தில் உள்ள அழுக்கு நீங்கும்.
hair fall 650

தலைமுடி பிரச்சனைகளுக்கு

தலைமுடி வளர்ச்சிக்கு கற்றாழை பயன்படுகிறது. மேலும், பொடுகு தொல்லை நீக்கும் குணநலனும் பெற்றுள்ளது. இதனால், ஆரோக்கியமான தலைமுடி வளரும்.

கற்றாழை ஜெல், எக்ஸ்டிரா விர்ஜின் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து தலைமுடிக்கு தேய்க்கவும். இரவு முழுவதும் ஊறவிட்டு, காலையில் கழுவவும்.இப்படி செய்து வந்தால், ஆரோக்கியமான தலைமுடி வளரும்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement