இருதய நோய்களை தவிர்க்க பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடலாம்!!!

ஆண்கள் தினசரி பழங்கள் சாப்பிடலாம்.  இதனால் இருதய நோய் வராமல் தடுக்க முடியும்.  ​

Translated by: Kamala Thavanidhi (with inputs from ANI)  |  Updated: June 10, 2019 17:32 IST

Reddit
Increase Consumption Of Fruits And Vegetables To Avoid Cardiovascular Problems, Says Study

 ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை சமமாய் உட்கொள்ள வேண்டுமென்றால் நீங்கள் தினசரி பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடலாம்.  தினமும் நார்ச்சத்து, நீர்ச்சத்து, வைட்டமின், தாதுக்கள் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிடுவது நல்லது.  உடல் சீராக இயங்குவதற்கு எல்லா ஊட்டச்சத்துக்களும் நமக்கு கட்டாயம் தேவைப்படுகிறது.  2010 ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், மிக குறைந்த அளவு பழங்களை சாப்பிட்டதால் 1.8 மில்லியன் மக்கள் இருதய நோய் காரணமாக இறக்க நேர்ந்திருக்கிறது.  காய்கறிகளை உட்கொள்ளும் அளவு குறைந்ததால் ஒரு மில்லியன் மக்கள் இறந்திருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

t7vbspko

 ஒவ்வொரு நாடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.  தென்னாசியா, கிழக்காசியா மற்றும் ஆஃப்ரிகா போன்ற நாடுகளில் காய்கறிகள் மற்றும் பழங்களின் பயன்பாடு மிகவும் குறைவாக இருந்திருக்கிறது.  இந்த விளைவாக, இந்த நாடுகளில் இறப்பின் விகிதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

fruits and vegetables

 பழங்கள் நிறைய சாப்பிடுவதால் அதிலிருந்து உடலுக்கு வைட்டமின் மற்றும் மற்ற ஊட்டச்சத்துக்கள் கிடைத்துவிடுகின்றன.  இதன் காரணமாக, உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை உட்கொள்வது குறையும்.  இந்த ஆய்வின் தகவல்படி பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளை அதிகம் உணவில் சேர்த்து கொண்டால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.  குறிப்பாக ஆண்கள் தினசரி பழங்கள் சாப்பிடலாம்.  இதனால் இருதய நோய் வராமல் தடுக்க முடியும்.  

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement