நீரிழிவு நோய் இருப்பவர்கள் மேப்பிள் சிரப் சாப்பிடலாமா???

100 சதவிகிதம் ஆர்கானிக் மேப்பிள் சிரப்பை பயன்படுத்துவதே சிறந்தது.  ஓட்மீல் சாப்பிடும்போது இதனை டாப்பிங்காக பயன்படுத்தலாம். 

Edited by: Kamala Thavanidhi  |  Updated: May 03, 2019 12:44 IST

Reddit
Is It Safe For Diabetics To Have Maple Syrup?
Highlights
  • வாழ்வியல் முறை பிரச்னை காரணமாக தான் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
  • நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை சேர்த்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
  • மேப்பிள் சிரப் பயன்படுத்துவது மிகவும் நல்லது.

உடல் அதற்கு தேவையான இன்சுலினை சரியாக சுரக்காதபோதுதான் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.  இன்சுலின் சுரப்பில் கோளாறு ஏற்படுவதும் ஒருவகை மெட்டபாலிஸ பிரச்னைதான்.  உலகம் முழுவதும் பெரும்பாலானோர் நீரிழிவு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதற்கு முக்கிய காரணம் வாழ்வியல் முறை.  நேரம் தவறி சாப்பிடுவது, துரித உணவுகளை சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்யாதிருத்தல், தூக்கமின்மை போன்ற பிரச்னைகளால் தான் நீரிழிவு நோய் உண்டாகிறது.  சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், 2030ஆம் ஆண்டு 98 சதவிகித இந்தியர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோர் உணவு பழக்கத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.  இயற்கை உணவுகளில் இருக்கக்கூடிய இனிப்பால் உடலில் இரத்த சர்க்கரை அதிகரிக்காது.  ஆனால் இனிப்பு சேர்த்து தயாரிக்கப்படும் உணவுகளை உட்கொள்வதால் இரத்த சர்க்கரை அதிகரித்து நீரிழிவு நோய் உண்டாகும். e59ms71oநீரிழிவு நோய் இருப்பவர்கள் மேப்பிள் சிரப்பை சாப்பிடுவதால் எந்த பிரச்னையும் இல்லையென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  ரெட் மேப்பிள் அல்லது ப்ளாக் மேப்பிள் மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் இந்த மேப்பிள் சிரப் கோல்டன் ப்ரௌன் நிறத்தில் இருக்கும்.  இனிப்பு சேர்த்து சாப்பிட நினைத்தால் சர்க்கரையை தவிர்த்து மேப்பிள் சிரப்பை பயன்படுத்தலாம்.  ஆனால் ஒருமுறை மருத்துவரின் ஆலோசனை பெருவது சிறந்தது.  இதில் தாதுக்கள் மற்றும் சிம்பிள் கார்ப் உள்ளது.  உங்கள் உணவில் நார்ச்சத்து மற்றும் புரதம் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.  இதனால் மேப்பிள் சிரப் விரைவாக செரிக்காமல் தாமதமாகும். மேப்பிள் சிரப்பில் சிங்க் இருப்பதால் தமணிகளை ஆரோக்கியமாக வைத்து கொள்வதுடன் ஆண்களில் ஆண்மைத்தன்மையை அதிகரிக்கவும் செய்கிறது.  மாங்கனீஸ் இருப்பதால் உடலுக்கு உடனடியாக ஆற்றலை கொடுக்கிறது.  சோடியம் குறைவு என்பதால் உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் உபயோகிக்கலாம்.  மேப்பிள் சிரப்பில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளை உறுதியாக்குகிறது.  மேப்பிள் சிரப்பில் க்ளைசமிக் இண்டெக்ஸ் 54 உள்ளது.  பொதுவாகவே, க்ளைசமிக் இண்டெக்ஸ் 55க்கு குறைவாக இருந்தால் செரிமானம் தாமதமாகி இரத்தத்தில் சர்க்கரை மிகவும் குறைவாக கலக்கும். 100 சதவிகிதம் ஆர்கானிக் மேப்பிள் சிரப்பை பயன்படுத்துவதே சிறந்தது.  ஓட்மீல் சாப்பிடும்போது இதனை டாப்பிங்காக பயன்படுத்தலாம்.  எனர்ஜி க்ரானோலா பார் தயாரிக்கும்போது இனிப்பிற்காக இதனை பயன்படுத்தலாம்.  கோடை காலத்தில் எலுமிச்சை சாறு அல்லது இளநீருடன் மேப்பிள் சிரப் சேர்த்து குடிக்கலாம்.  இதில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்திருக்கிறது. 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com