லோ-கார்ப் ரொட்டி செய்வது எப்படி??

நீரிழிவு நோயாளிகள் லோ-கார்ப் உணவுகள், புரதம் நிறைந்த உணவுகள் மற்றும் க்ளைசமிக் இண்டெக்ஸ் அளவு குறைந்த உணவுகளையே சாப்பிட வேண்டும். 

Translated by: Kamala Thavanidhi  |  Updated: July 11, 2019 12:02 IST

Reddit
Diabetes Diet: Low-Carb Special Roti May Help Regulate Blood Sugar
Highlights
  • நீரிழிவு நோயாளிகளுக்கு ரொட்டி சரியான உணவு.
  • கம்பில் புரதம் அதிகமாக இருக்கிறது.
  • ரொட்டியில் க்ளைசமிக் இண்டெக்ஸ் மிகவும் குறைவாக இருக்கிறது.

இந்தியாவில் பெரும்பாலான வீட்டில் காலை மற்றும் இரவு உணவாக இருப்பது ரொட்டி.  இந்த ரொட்டி முழுகோதுமையில் தயாரிக்கப்படுகிறது.  மைதாவில் நாண், பட்டூரா மற்றும் பூரி ஆகியவை மைதாவில் செய்யப்படுகிறது.  இந்த மாவில் கார்போஹட்ரேட் அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவதை தவிர்க்கவும்.  பொதுவாக நீரிழிவு நோயாளிகள் லோ-கார்ப் உணவுகள், புரதம் நிறைந்த உணவுகள் மற்றும் க்ளைசமிக் இண்டெக்ஸ் அளவு குறைந்த உணவுகளையே சாப்பிட வேண்டும். 

நீரிழிவு நோயின் அறிகுறி இருக்குமானால் உடனடியாக உணவு பழக்கத்தை மாற்றுவது அவசியம்.  இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடிய உணவுகளை தவிர்ப்பது நல்லது.  இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த கூடிய உணவுகள் என்னென்ன என்பதை பட்டியலிட்டு வைத்து கொள்ளுங்கள்.  அதன்படி அல்லது மருத்துவரின் அலோசனைப்படி உணவுகளை உட்கொள்வதே சிறந்தது.

Listen to the latest songs, only on JioSaavn.com

afcjugp8

 இரத்த சர்க்கரையை சீராக வைத்திருக்க கம்பு மற்றும் வெந்தயக்கீரையை சாப்பிடலாம்.  கம்பு மற்றும் வெந்தயக்கீரை சேர்த்து ரொட்டி செய்து சாப்பிட்டால் உடலுக்கு புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகமாக கிடைத்திருக்கும்.  கார்போஹைட்ரேட் மற்றும் க்ளைசமிக் இண்டெக்ஸ் குறைவான உணவு இது.  

6p7u96f8

 முழுகோதுமை, வெந்தயக்கீரை, தயிர், பச்சைமிளகாய் ஆகியவை சேர்த்து ரொட்டி தயாரிக்கலாம்.  தயிர் மற்றும் பச்சை மிளகாயில் கலோரிகள் துளியும் இருப்பதில்லை. வைட்டமின் மற்றும் தாதுக்கள் இதில் அதிகமாக இருக்கிறது.  ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.  

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement