டைப் 2 சர்க்கரை நோய்க்கு என்ன காரணம் தெரியுமா..!

காலை உணவில் கிடைக்கும் ஊட்டச்சத்துதான் உடலின் ஜூரண சக்திக்கும், வளர்சிதை மாற்றத்திற்கும் உதவக்கூடியது.

एनडीटीवी फूड डेस्क (with inputs from IANS)  |  Updated: January 18, 2019 17:12 IST

Reddit
Manage Type-2 Diabetes: Eat Breakfast Like A King!

உடல் நல ஆலோசகர்கள் பலரும் காலை உணவின் முக்கியத்துவத்தை சொல்லிக் கொண்டுதான் வருகிறார்கள். காலை உணவு என்றால் ஒரு ஆப்பிளும் ஒரு கிளாஸ் பாலும் போதும் என்று தான் பலரும் நினைக்கின்றனர். ஆனால் அது உடல் நலத்துக்கானது அல்ல. முழுமையான காலை உணவுடன் ஒரு கிளாஸ் பழச்சாறோ அல்லது பாலோ ஒரு பகுதியாக இருக்க வேண்டுமே தவிர அதை மட்டுமே காலை உணவாக எடுத்துக் கொள்ளக் கூடாது. காலை உணவில் கிடைக்கும் ஊட்டச்சத்துதான் உடலின் ஜூரண சக்திக்கும், வளர்சிதை மாற்றத்திற்கும் உதவக்கூடியது.

நியூட்ரீஷியன் பத்திரிக்கை வெளியிட்ட ஆய்வறிக்கையில், காலை நேரத்தில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டவர்களை விட காலை உணவை சாப்பிடாமல் இருப்பவர்களுக்கே டைப்-2 சர்க்கரை நோய் வருவதற்கான அபாயங்கள் அதிகமா உள்ளதென தெரிவித்துள்ளனர்.

இந்த ஆராய்சிக்கு சுமார் 96,000 மக்களை உட்படுத்தி தகவல்களை சேகரித்துள்ளனர். இந்த ஆராய்ச்சி 6 விதமான படிப்பினைகளை (studies) முடிவாக முன்னிறுத்தியது. வாரம் ஒரு முறை காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்கு 6 சதவீத வாய்ப்பு உள்ளதென தெரிவித்துள்ளது. 

breakfast 650

 

வாரத்திற்கு 4-5 முறை காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு 55 சதவீதம் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவித்துள்ளது. நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் அறிக்கைப்படி அமெரிக்காவில் 30 மில்லியன் மக்கள் டைப் 2 சர்க்கரை நோயுடன் வாழ்வதாக தெரிவித்துள்ளது. டைப் 1 சர்க்கரை நோய் இளம் வயதிலே கண்டறியப்பட்டு விடுகிறது. டைப் 2 சர்க்கரை நோய் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு உருவாகிறது.

சர்க்கரை நோய் வருவதற்கான பிற காரணங்கள், அதிக எடை, உடல் உழைப்பு இல்லாத வேலைச் சூழல், மரபியல் கூறுகள் எனத் தெரிவிக்கின்றனர்.. இந்த ஆராய்ச்சி குறித்து ஆராய்ச்சியாளார் ஜெனோ ஃப்ரீமேன் ஸ்கூடரிடம் பேசிய போது, “காலை உணவை தவிர்க்கும்போது அது இன்சூலின் சுரப்பை நிச்சயமாக குறைக்கும். இன்சூலின் சுரப்பை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது. 

காலை உணவைத் தொடர்ந்து தவிர்த்து வந்தால் இரத்தத்தில் சுகரின் அளவு அதிகரிக்கவே செய்யும். காலை நேர உணவில் அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைப்பது போன்ற உணவையே சாப்பிடுங்கள். இந்தியாவின் தேசிய நோயான சர்க்கரை நோயிலிருந்து உங்களை நீங்களே முன்கூட்டியே காப்பாற்றிக் கொள்ளுங்கள். 

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement