குந்த்ரா பாட்டத்தியாச்சா கீஸை சமைக்க ஷில்பா ஷெட்டி வழிகாட்டுகிறார்!!

இந்த உணவான பாட்டாத்தியாச்சா கீஸ், வேர்க்கடலையுடன் பான் வறுத்த மசாலா உருளைக்கிழங்கு என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு உருளைக்கிழங்கு சார்ந்த உணவாகும், இது வேர்க்கடலையையும் கொண்டிருக்கும்.

NDTV Food  |  Updated: June 12, 2020 17:36 IST

Reddit
Shilpa Shetty Kundra Shows How To Make Authentic Batatyacha Kees – A Maharashtrian Delicacy

எளிதான உருளைக்கிழங்கு சார்ந்த உணவின் செய்முறை வீடியோவை ஷில்பா ஷெட்டி வெளியிட்டார்.

Highlights
  • Shilpa Shetty has been cooking various dishes during lockdown.
  • In her latest Instagram post, she shared recipe of a Maharashtrian meal.
  • Batatyacha kees is made with grated potatoes and roasted peanuts.

ஆரோக்கியமான மற்றும் சுவையான பல சுவாரஸ்யமான சமையல் குறிப்புகளை நமக்கு வழங்கியதற்காக பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் இவர் உடற்பயிற்ச்சிகளில் தொடரச்சியாக கவனம் செலுத்தக்கூடியவர். அத்துடன் உணவு முறையில் கட்டுப்பாடுகளை கொண்டுள்ளவராவார். ஆனால், சுவையில் ஒரு போதும் சமரசம் செய்துக்கொள்வதில்லை. அவர் தனது அனைத்து சமையல்களிலும் போதுமான ஊட்டச்சத்து இருப்பதை உறுதி செய்துக்கொள்கிறார். அவரது இன்ஸ்டாகிராம் சேனலில் சமீபத்தில் அவர் வெளியிடப்பட்ட மகாராஷ்டிராவின் பாரம்பரிய சிறப்பு உணவான பாட்டாத்தியாச்சா கீஸின் ரெசிபி வீடியோ மிகவும் பிரபலமாகும்.

இந்த உணவான பாட்டாத்தியாச்சா கீஸ், வேர்க்கடலையுடன் பான் வறுத்த மசாலா உருளைக்கிழங்கு என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு உருளைக்கிழங்கு சார்ந்த உணவாகும், இது வேர்க்கடலையையும் கொண்டிருக்கும். அடிப்படையில் உருளைக்கிழங்கு மற்றும் வேர்க்கடலை இரண்டும் அதிக சத்தான உணவுகள். உருளைக்கிழங்கிலிருந்து நாம் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் ஏராளமாக பெறுகிறோம். வேர்க்கடலை நமக்கு அதிக புரதத்தினை கொடுக்கின்றது.

படத்யா கீஸ் ஒரு எளிய, சுலபமாக தயாரிக்கக்கூடிய உணவாகும், இது ஒரு சிற்றுண்டாகவோ அல்லது உங்கள் உணவோடு ஒரு சைட் டிஷாகவோ சமைக்கலாம். ஷில்பா ஷெட்டி வெளியிட்ட வீடியோவில் இந்த உணவினை எப்படி சரியாக செய்வது என குறிப்பிடப்பட்டுள்ளது.

(Also Read: Shilpa Shetty Kundra Made Simple South Indian Quarantine Breakfast)Listen to the latest songs, only on JioSaavn.com

நீங்கள் உருளைக்கிழங்கை வேகவைத்து முன்கூட்டியே உரித்து நீரில் போட்டுவிட வேண்டும். இது உருளைக்கிழங்கு பழுப்பு நிறமாக மாறுவதை தவிர்க்கும். ஜீரா, பச்சை மிளகாய் மற்றும் வறுத்த வேர்க்கடலை சேர்த்து நெய்யில் சமைக்கவும். ஆளிவிதை தூள் (விரும்பினால்) கொத்தமல்லி இலைகளால் அலங்கரித்து பரிமாறவும்.

நீங்கள் உண்ணாவிரதம் இருக்கும் நாட்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். உங்களுக்கு நிறைய சமைக்கத் தெரியாதபோது இதை முயற்சிக்கவும் என ஷில்பா ஷெட்டி தனது இடுகையில் கூறியுள்ளார்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய சமையல்

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement