மலச்சிக்கலா? இந்த பழங்களை சாப்பிடுங்கள்.

ஒழுங்கற்ற வாழ்வியல் முறை, தவறான உணவு பழக்கம், உடற்பயிற்சியின்மை, நீர் போதாமை, அதிகபடியாக இறைச்சி உண்ணுதல் ஆகியவை மலச்சிக்கலை உண்டாக்கும்.

एनडीटीवी फूड डेस्क  |  Updated: December 14, 2018 17:48 IST

Reddit
Constipation Problems? These 3 Winter Fruits May Help Relieve Indigestion

மலச்சிக்கல் என்பது பொதுவாக வரக்கூடிய உடல் உபாதைதான். ஒழுங்கற்ற வாழ்வியல் முறை, தவறான உணவு பழக்கம், உடற்பயிற்சியின்மை, நீர் போதாமை, அதிகபடியாக இறைச்சி உண்ணுதல் ஆகியவை மலச்சிக்கலை உண்டாக்கும். இதனை எப்படி சரிசெய்வது என்பது பற்றி தான் இந்த கட்டுரை.

திராட்சை
திராட்சையில் உடலுக்கு தேவையான நார்ச்சத்து நிறைந்துள்ளது. 100 கிராம் திராட்சையில் 4 கிராம் நார்ச்சத்து இருக்கும். திராட்சையை அப்படியே சாப்பிடலாம் அல்லது சாலட் மற்றும் தயிருடன் சேர்த்து சாப்பிடலாம். இது செரிமானத்தை தூண்டி மலச்சிக்கலை தவிர்க்கும்.
 

grapes

 

ஆரஞ்சு
தினசரி ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிடலாம். நாள் ஒன்றுக்கு 13 சதவிகித நார்ச்சத்து உடலுக்கு தேவை. ஒரு ஆரஞ்சில் 3 கிராம் நார்ச்சத்து உள்ளது. தினமும் ஆரஞ்சு சாப்பிட்டு வர மலச்சிக்கல் சரியாகும்.

oranges

 

கொய்யா
கொய்யாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் வயிறு மற்றும் குடல் பகுதி ஆரோக்கியமாக இருக்கும். மலச்சிக்கல் தவிர்க்கப்படும். கொய்யா இலையில் ஆண்டிமைக்ரோபியல் தன்மை இருக்கிறது. வயிற்று போக்கை உண்டாக்கும் பாக்டீரியாவை இது அழித்துவிடும்.உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement