ரெய்தாவை எப்படி கிரீமியாக செய்வது??

வெள்ளரி மற்றும் புதினா ஆகியவற்றுடன் தயிர் சேரும்போது, அதில் நீர் வெளியேறும்.  அதனால் வெள்ளரி மற்றும் புதினா ரெய்தா செய்யும்போது, எலக்ட்ரிக் பீட்டர் பயன்படுத்த வேண்டாம். 

Edited by: Kamala Thavanidhi  |  Updated: September 17, 2019 17:19 IST

Reddit
Indian Cooking Tips: 3 Quick And Easy Tips To Thicken Raita And Make It Creamier
Highlights
  • தயிரில் குடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறது.
  • வெள்ளரி, தக்காளி, வெங்காயம் சேர்த்து ரெய்தா தயாரிக்கலாம்.
  • பழங்கள் சேர்த்து கிரீமி ரெய்தா தயாரிக்கலாம்.

வட இந்தியாவின் பெரும்பாலான ரெசிபிகள் ரெய்தா இல்லாமல் இருக்காது.  குறிப்பாக தயிர் இல்லாமல் இருக்காது.  காய்கறிகள் மற்றும் பழங்கள் கொண்டு தயாரிக்கப்படும் ரெசிபிகளில் கூட தயிர் சேர்க்கப்படுகிறது.  இது ருசியை அதிகப்படுத்துவதோடு குடல் ஆரோக்கியத்தையும் சீராக வைத்திருக்கும்.  பொதுவாக ஹோட்டல்களில் கெட்டியான கிரீமியான ரெய்தா கிடைக்கும்.  அதே சுவையில், அதே பதத்தில் வீட்டிலுமே ருசியான ரெய்தா தயாரிக்கலாம்.  வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நறுக்கி ரெய்தா தயாரிக்கலாம்.  அல்லது புதிதான சுவையில் அன்னாசி பழம் கொண்டு ரெய்தா தயாரிக்கலாம்.  அல்லது பல காய்கறிகளை சிறு துண்டுகளாக வெட்டி சேர்த்து ரெய்தா தயாரிக்கலாம். சில எளிய குறிப்புகளை பார்ப்போம். flax seed raita

 

குறிப்பு 1:

பொதுவாக ரெய்தா தயாரிக்கும்போது, தயிரில் சிறிதளவு நீர் சேர்த்து பின் காய்கறிகள் அல்லது பழங்கள் மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து தயாரிப்போம்.  நீங்கள் ரெய்தா செய்ய துவங்கும்போது ஒரு துணியில் தயிரை வடிகட்டிட வேண்டும்.  அப்போதுதான் அதில் இருக்க கூடிய அதிகபடியான நீர் வெளியேறும்.  இப்போது உங்களுக்கு கெட்டியான தயிர் கிடைக்கும்.  அதில் ரெய்தா தயாரிக்கலாம். 

குறிப்பு 2:

மேலும் ரெய்தா சுவையாகவும் கிரீமியாகவும் இருக்க சிறிதளவு ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து கலந்து கொள்ளலாம்.

குறிப்பு 3:

வெள்ளரி மற்றும் புதினா ஆகியவற்றுடன் தயிர் சேரும்போது, அதில் நீர் வெளியேறும்.  அதனால் வெள்ளரி மற்றும் புதினா ரெய்தா செய்யும்போது, எலக்ட்ரிக் பீட்டர் பயன்படுத்த வேண்டாம். 

இவற்றை மதிய உணவு அல்லது இரவு உணவுடன் சேர்த்து சாப்பிடலாம்.  சுவையான ரெய்தா தயாரிக்க இந்த குறிப்புகளை பின்பற்றவும். 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய சமையல்

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement