ஒரு இனிய மாலையை செலவழிக்க சென்னையின் சிறந்த 10 கஃபேக்கள்

சென்னையில் இனிமையாக நேரம் செலவழிக்க ஏற்ற சிறந்த கஃபேகள்

   |  Updated: July 02, 2018 19:12 IST

Reddit
10 of Chennai's Finest Cafes
Highlights
  • இவை சென்னையில் நண்பர்களுடன் செல்வதற்கு சிறந்த இடங்கள்
  • ஒவ்வொரு ஹோட்டலும் அதன் தனித்துவமான கதைகளை கொண்டிருக்கின்றன
  • அவைகளின் அழகான சூழல் உங்கள் மனதுக்கு புத்துணர்ச்சி தரும்
ஒரு நீண்ட நாள் பள்ளி நண்பரை சந்திக்கவோ அல்லது ஒரு பிஸ்னஸ் சந்திப்பு அல்லது மாலை 5 மணிக்கு மதிய உணவு தேவைப்பட்டால், சென்னையில் ஊள்ள கஃபேகள் தான் சரியான சாய்ஸ். சென்னையின் ஹாட் டிரெண்டாக இருக்கும் கஃபேக்கள், ஒவ்வொன்றும் ஒரு கதையை சொல்கின்றன. 

சென்னையில் இனிமையாக நேரம் செலவழிக்க ஏற்ற சிறந்த கஃபேக்களின் லிஸ்ட் இங்கே.

1. அமீதிஸ்ட் (Amethyst)

இன்றைய கஃபே ட்ரெண்டின் தொடக்கம் அமீதிஸ்ட் எனலாம். காலனிய காலத்து பாரம்பரிய பங்களாவில் அமீதிஸ்ட் கஃபேவை தொடங்கியது. பின் 2010-ம் ஆண்டு பழமையான பங்களா ஒன்றில் கஃபேவை மாற்றியது. அமீதிஸ்ட் பசுமையான தோட்டத்தின் நடுவே அமைதியான சூழலில் அழகாக அமைக்கப்பட்டுள்ளது. ஃபிங்கர் ஃபூட், சுமூத்தீஸ்மற்றும் சுவையான வாழைப்பழ பிரட்களைக் கொண்டுள்ளது. இடம்: ஒயிட்ஸ் ரோடு, இராயப்பேட்டை.
 

A post shared by Amethyst (@amethystchennai) on


2. சிஸ்லோ கபே (ciclo cafe)
Newsbeep
பல வருடங்களாக சென்னை ஒரு சைக்கிள் உற்பத்தி மையமாக விளங்குகிறது. சைக்கிள் தீம் கொண்ட முதல் கஃபே இங்கு தான் அமைக்கப்பட்டுள்ளட்து. சிஸ்லோ, சைக்கிள் விற்பனை நிலையத்தையும் கஃபேவையும் ஒன்றிணைத்துள்ளது. சைக்கிள் மற்றும் சைக்கிள் தொடர்பான பொருட்கள் கொண்டு கஃபே வடிவமைக்கப்பட்டுள்ளது. கொஞ்சம் காஃபி, நிறைய உரையாடல் என உங்கள் அன்பானவர்களோடு நேரம் செலவழிக்க ஏற்ற இடம் சிஸ்லோ கஃபே. இடம் -  காந்தி மண்டபம் சாலை, கோட்டூர்புரம்.
 
 

A post shared by Ciclo Café (@cafeciclo) on

 

3. சாமியர்ஸ் கஃபே (chamiers cafe)

இது சென்னை ஸ்விஷ் போட் கிளப் பகுதியில் அமைந்திருக்கிறது. அப்பகுதி மக்களின் ஃபேவரைட் ஸ்பாட்களில் இதுவும் ஒன்று. இந்த கஃபேயின் இன்டீரியர் வடிவமைப்பு காலனிய ஆட்சியில் மெட்ராஸை மறு உருவாக்கம் செய்தது போல் இருக்கிறது. வித்தியாசமான மெனு, ஒட்டுமொத்தமாக வேற லெவல் அனுபவத்தை தருகின்றன. இடம் -  சாமியர்ஸ் ரோடு, ஆல்வார்பேட்டை.
 
 

A post shared by Chamiers (@chamierschennai) on


4. ரைட்டர்ஸ் கஃபே (Writer's cafe)

சென்னையில் உள்ள இலக்கிய விரும்பிகளுக்கான கஃபேவாக இது தோற்றம் அளிக்கிறது. இங்கு எழுத்தாளர்கள் மற்றும் படைப்புத் திறன் வாய்ந்தவர்களோடு இணைய சரியான இடம். இங்கு புத்தகங்கள் மட்டுமே பொருட்கள்; இந்த கஃபே ஒரு ஹிகின்போதம்ஸ் புத்தக கடைகயைப் போல் இரட்டிப்பானது. அதன் சமூக அக்கரையின் ஒரு அங்கமாக தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் சுவிஸ் பேக்கரி சமையல் கலைஞர்களால் பயிற்சி வழங்கப்படுகிறது. தெற்கு ஜெர்மனியை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஃபிளாகுசென் செவ்வக மெல்லிய கிரஸ்ட் பீட்சா சென்னையில் கிடைக்கும் இடம் இதுதான்.  இடம் - பீட்டர்ஸ் ரோடு இராயப்பேட்டை.
 

A post shared by Rochelle Stephen (@rxochelle) on

5. லாட்டிட்யூட் பை தி பார்க் (Latitude by the Park)

அனைத்து நாட்களும் திறந்திருக்கும் இந்த உணவகம் நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ளது. பிஸ்னஸ் மீட்டிங்களுக்கு ஏற்ற இடம். பிளேட்டர்கள், பனினி மற்றும்  பாஸ்தா வகைகள் இங்கு ஃபேவரைட். பல இனிப்பு வகைகளும் இங்கு பிரபலமாக உள்ளது. ஃபாரெஸ்ட் பெர்ரி கிரிம்பிளோடு வீட்டில் தயாரிக்கப்பட்ட ஜெலடோ இவர்களின் அடையாளம். இடம் - ருட்லாண்ட் கேட், நுங்கம்பாக்கம்.


6. இங்கிலீஷ் டீ ரூம்.(English tea room)

ஒரு விறுவிறுப்பான நாளுக்கு இடையில் ஒரு சின்ன ஓய்வு கொடுப்பதற்கு அதுவும் டீ நேரத்திற்கு இது சிறந்த இடம். இவர்களின் சிறப்பு, பிற்பகல் பாஸ்ட்ரீஸுடன் கூடிய கிரீம் டீ செட். சாண்ட்விச்கள், தேநீர் மற்றும் வெதுவெதுப்பான ரைசின் ஆகியவை இங்கு பிரபலமான உணவு வகைகள். இடம் -  கஸ்தூரி ரங்கன் சாலை, ஆல்வார்பேட்டை.

7. லாயிட்ஸ் டீ ஹவுஸ் (Lloyds Tea House)

சென்னைக்கே பிரபலமான காஃபிக்கு சவாலாக, இவர்கள் செமயான டீ வகைகளை தருகின்றனர் (60 க்கும் மேற்ப்பட்ட வகைகள்). செம்பருத்தி மற்றும் பிரான்சியன் பெப்பெர்மின்ட் டீ இவர்களின் சிறப்பு. ஆனால்  இங்கே டீ வகைகள் மட்டும் இல்லை, இனிப்பு மற்றும் கேக் வகைகள் மிகவும்  ஈர்க்கக் கூடியதாக இருக்கிறது. இடம் -  லாயிட்ஸ் சாலை, கோபாலபுரம்.

8. அஸ்விதா பிஸ்ட்ரோ(Ashvita Bistro)

Listen to the latest songs, only on JioSaavn.com

இலைகள் சரிந்த அழகிய ஆழ்வார்பேட்டை வீதிகளில் ஒன்றில் அமைந்திருக்கிறது அஸ்விதா  பிஸ்ட்ரோ. வசதியான உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் உட்கார்ந்து சாப்பிடுவதற்கான வசதிகளைக் கொடுக்கிறது. மெனு மிகவும் தேர்தெடுக்கப்பட்ட பிரபலமான மொமொஸிலிருந்து மான்ஸ்டர் ஷேக்ஸ் தாய் மற்றும் ஒரியன்டல் கரீஸைக் கொண்டுள்ளது. இடம் - பவா ரோடு, ஆழ்வார்ப்பேட்டை.

 

A post shared by Rasha Bashir (@rrashabashirr) on

9. கிரிஸ்ப்(crisp)

கேக்வாக் - 1990 களில் சென்னையின் முதல் கேக் கடை மற்றும் கஃபே. கேக்வாக்கின் 2010 வெர்ஷன் தான் கிரிஸ்ப். பர்கர்ஸ் மற்றும் சாண்விட்ஜ்களைத் தாண்டி ரெட் வெல்வெட் பான் கேக்குகள், பீஃப் ஸ்ட்டீக் சிறப்பாக விற்கப்படுவதில் ஒன்று. கோதரி ரோடு, நுங்கம்பாக்கம்.

 

A post shared by Jothi Vel Moorthi (@jovemac) on

10. கஃபே இன்கோ சென்டர்

Commentsஇது எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  மெனு மிகவும் குறைவாகவே உள்ளது ஆனால் இன்கோ சென்டரின் பகுதியாக இருக்கும் இந்த சிறிய கஃபே ஒரு பயங்கரமான இருப்பிடம் மற்றும் ஒரு சிறந்த சுற்றுச்சூழலைக் கொண்டுள்ளது.இது தான் சென்னையில் கொரியன் உணவுகளை கொடுக்கும் ஒரே உணவகமாக இருக்கலாம். ஜின்செங் டீயிலிருந்து, கிரீன் பிளம் சோடா, சக்கரவல்லிக் கிழங்கு, மற்றும் பட்பிங்க்ஸு (ஐஸுடன் சிகப்பு பீன்ஸ்களை சேர்த்துக் கொடுக்கும் இரு வகை) இது ஐஸ் கச்சாங்க் போன்றது; ஐஸ் ஷேவிங்க்ஸ், சிவப்பு பீன் பேஸ்ட் மற்றும் பல்வேறு இனிமையான டாப்பிங்க்ஸைக் கொண்டிருக்கும் ஒரு பிளேட்டர் இது. இடம் -  போட் கிளப் சாலை.
உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement