லெமன் டீ தெரியும், ஃபுரூட் டீ தெரியுமா? 5 நிமிடத்தில் செய்யலாம்!

இதில் எந்தவிதமான தேயிலையும், காஃபினும் கிடையாது.

  |  Updated: August 07, 2020 20:05 IST

Reddit
Immunity-Boosting Tea: 5-Minute Fruit-Infused Tea Recipe For Monsoon

ஃபுரூட் டீ என்பது 5 நிமிடத்தில் செய்யக்கூடிய அற்புதமான பானமாகும்.

Highlights
  • தேநீரில் பலவகை உள்ளன
  • தற்போது ஃபுரூட் டீ பரவலாக தயாரிக்கப்பட்டு வருகிறது
  • இந்த டீயை 5 நிமிடத்தில் செய்துவிடலாம்

தேநீர் என்பது உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான பானங்களில் ஒன்றாகும். காலை எழுந்தவுடன் புத்துணர்ச்சி பெறுவதற்கு டீ குடிக்கிறோம். வேலை செய்துவிட்டு மாலை நேரத்தில், களைப்பாக இருக்கும் போதும் தேநீர் குடிக்கிறோம். 

இவ்வாறு நம்மை புத்துணர்ச்சியூட்டும் தேநீரில் பலவகைகள் உள்ளன. பிளாக் டீ, நார்மல் டீ, மசாலா டீ, இஞ்சி டீ, கிரீன் டீ, மூலிகை டீ என பல உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். இது  எடை குறைப்புக்கு, செரிமானக் கோளாறு ஆகியவற்றுக்கும் ஏற்றவாறு தயார் செய்யப்படுகிறது. பெரும்பாலானோர் சாதாரண பால் டீ விரும்புகிறார்கள். இன்னும் சிலர் உடல் ஆரோக்கியத்திற்காக கிரீன் டீ குடிப்பார்கள்.  

Listen to the latest songs, only on JioSaavn.com

இத்தகைய தேநீர் வரிசையில் பரவலாகி வருவதுதான் ஃபுரூட் டீ. தேயிலைக்குப் பதிலாக பழங்களால் ஆன தேநீர். அண்மைக்காலமாக இந்த வகை டீ பிரபலமாகி வருகிறது. 

இதில் தேயிலைகள் பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக மசாலா மற்றும் மூலிகைகள் சேர்த்து, சில பழங்களையும் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து தயார் செய்யப்படுகிறது. 

பழங்களிலுள்ள வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் அப்படியே தண்ணீரில் நீர்த்து எடுக்கப்படுவதால், இது உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக கருதப்படுகிறது. மேலும், பழங்களின் சுவையும், இனிப்பும் புத்துணர்ச்சியாக்குகின்றன.
 

vh8a392g

சுவையான ஃபுரூட டீ 

மழைக்காலத்தில் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு ஏற்ற ஒரு பானம் ஃபுரூட் டீ ஆகும். அஜீரணம், வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி போன்றவைகளை குணப்படுத்த ஃபுரூட் டீ உதவுகிறது. இதில் எந்தவிதமான தேயிலையும், காஃபினும் கிடையாது. ஃபிரஷான ஆரஞ்சு பழங்கள், பெர்ரி பழங்களை துண்டுகளாக்கி, அத்துடன் இஞ்சி, புதினா இலை ஆகியவை சேர்க்க வேண்டும். பின்னர், இவையனைத்தையும் கொதிக்க வைத்து, நாட்டுச் சர்க்கரை சேர்த்தால் போதும். ஃபுரூட் டீ ரெடி. 

ஆரஞ்சு மற்றும் பெர்ரி போன்ற வைட்டமின் சி நிறைந்த பழங்கள் இருப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தேநீரில் இஞ்சியின்  இனிமையான மண் சுவையும் உள்ளது. ஒட்டு மொத்தமாக ஃபுரூட் டீ என்பது 5 நிமிடத்தில் செய்யக்கூடிய அற்புதமான பானமாகும். நீங்களும் செய்து பாருங்களேன்!

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement