மரவள்ளி கிழங்கு பொரியல்

NDTV Food  |  Updated: August 31, 2018 18:59 IST

Reddit
Kappa (Tapioca) Recipe

தேவையானவை

மரவள்ளி கிழங்கு – 2
தண்ணீர், உப்பு – தேவையான அளவு

அரைக்க

தேங்காய் துருவல் – 1 கப்
சீரகம் – 1 தேக்கரண்டி
பூண்டு – 2 பற்கள்
பச்சைமிளகாய் – 2
மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப

தாளிக்க

தேங்காய் எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – 3 (பொடியாக நறுக்கியது)
காய்ந்த மிளகாய் – 3
கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

முதலில் கிழங்கை தோல் சீவி சிறுசிறு துண்டுகளாக்கி தண்ணீரில் நன்கு கழுவவும். ஒரு வாணலியில் சிறிது தண்ணீர் சேர்த்து நறுக்கி வைத்த மரவள்ளிக்கிழங்கு துண்டுகளை போட்டு அத்துடன் உப்பு சேர்த்து அவிக்கவும். நன்கு வெந்ததும் தண்ணீரை வடிகட்டி வைக்கவும். தேங்காய் துருவல், பச்சைமிளகாய், பூண்டு, சீரகம், மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்கு விழுது போல அரைத்துக்கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து அவித்து வைத்த கிழங்கு மற்றும் அரைத்து வைத்த விழுதையும் சேர்த்து 10 நிமிடங்கள் வேகவிடவும். வெந்தபின் மரக்கரண்டி கொண்டு கிழங்கை நன்கு மசித்து எடுத்து வைக்கவும். பின் மற்றொரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, நறுக்கி வைத்த சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து பொன்னிறமாகும் வரை தாளிக்கவும். தாளித்தவற்றை தனியே எடுத்து வைத்துள்ள கிழக்கு மசியலில் சேர்த்து கிளரவும். இந்த மரவள்ளிக்கிழங்கு பொரியலை மீன் குழம்புடன் சேர்த்து சாப்பிட ருசி அட்டகாசமாய் இருக்கும்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
Tags:  TapiocaRecipe

Advertisement
Advertisement