சூரிய கிரகணம் எப்போது தெரியும்! என்ன உணவு சாப்பிடலாம்!?

குறிப்பிட்ட உணவைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என எந்த விஞ்ஞானிகளும் அறிவுறுத்தவில்லை.

Aditi Ahuja  |  Updated: June 21, 2020 11:07 IST

Reddit
Solar Eclipse 2020: Date, Time And Food Myths During The Eclipse

சூரிய கிரகணம் 2020: சந்திரனைச் சுற்றி ஒரு அரிய 'நெருப்பு வளையத்தை' மக்கள் காண்பார்கள்.

Highlights
  • Solar eclipse 2020 is slated to occur on 21st June
  • A 'ring of fire' will be visible in various countries including India
  • Here are some nutritionist recommendations for solar eclipse

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தைக் காண இந்தியா தயாராக உள்ளது. 2020-ம் ஆண்டின் ஜூன் 21 ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும்போது மூன்று கோள்களும் ஒரே நேர் கோட்டில் குறிப்பிட்ட நிமிடங்கள் வரை இருக்கும். சந்திரன் பூமியிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. இதனால் சூரியனை முழுமையாக மறைக்க முடியாது. எனவே, நெருப்பு வளையம் போன்ற தோற்றத்தினை சந்திரன் உருவாக்கும்.

சூரிய கிரகணம் 2020: கிரகணத்தின் தேதி மற்றும் நேரம்

ஜூன் 21, 2020 அன்று நடைபெறவிருக்கும் சூரிய கிரகணம் சில ஆசிய நாடுகளான பாகிஸ்தான், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் தெரியும். Timeanddate.com இன் படி இந்தியாவில் சூரிய கிரகணம் தெரியும் நேரங்கள் இங்கே.

பகுதி கிரகணம் தொடங்கும் நேரம் - 09:15:58

முழு கிரகணத்தைக் காண - 10:17:45

அதிகபட்ச கிரகணம் - 12:10:04

முழு கிரகண முடிவைக் காண - 14:02:17

பகுதி கிரகண முடிவைக் காண - 15:04:01

சூரிய கிரகணம் 2020: 'நெருப்பு வளையத்தின்' முக்கியத்துவம்:

1938 க்குப் பிறகு ஜூன் 21 அன்று நடைபெறும் சூரிய கிரகணம் இதுவாகும். மட்டுமல்லாமல் நீண்ட பகலை கொண்ட நாளாக ஜூன் 21 இருக்கிறது. அடுத்ததாக இதே நாளில் 2039-ம் வருடம் சூரிய கிரகணம் ஏற்படும். சந்திரன் சூரியனின் 99.4% வரை மறைக்கும். எனவே நெருப்பு வளையம் பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும்.

சூரிய கிரகணம் அன்று என்ன சாப்பிட வேண்டும்;

சூரிய கிரகணம் நிகழும் காலகட்டத்தில் உணவு மற்றும் நீர் தவிர்க்கப்பட வேண்டும் என்பது பொதுவாக சொல்லப்படும் கட்டுக்கதை. ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் மேக்ரோபயாடிக் சுகாதார பயிற்சியாளர் ஷில்பா அரோரா, இது வெறுமனே உட்கார்ந்து உங்கள் உடல், மனம் மற்றும் உங்கள் செரிமான அமைப்பை நிதானப்படுத்தும் நேரம் என்று நம்புகிறார்கள். "இது மிக உயர்ந்த ஆற்றல் காலம் மற்றும் அதிர்வுகள் மிகவும் வலுவானவை. நிதானமாக இருக்க வேண்டிய நேரம் இது" என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

குறிப்பிட்ட உணவைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என எந்த விஞ்ஞானிகளும் அறிவுறுத்தவில்லை. இதர நாட்களை போல இதுவும் ஒரு சாதாரண காலை பொழுதுதான் என அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், சுகாதார பயிற்சியாளர் ஷில்பா, பழச்சாறுகள் எடுத்துக்கொள்வதை ஊக்குவிக்கிறார்.

Comments

About Aditi AhujaAditi loves talking to and meeting like-minded foodies (especially the kind who like veg momos). Plus points if you get her bad jokes and sitcom references, or if you recommend a new place to eat at.

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement