एनडीटीवी फूड | Updated: January 21, 2019 15:27 IST
Super Blood Wolf Moon 2019 : ‘சூப்பர் ப்ளட் மூன்' என்றழைக்கப்படும் முழு சந்திர கிரகணம் வானவியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளை வானத்தை நோக்கி திருப்பியுள்ளது. 2019 ஆண்டு முழு சந்திர கிரகணம் இன்று தெரியும் என அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. பூமிக்கு நெருக்கமான சுற்று வட்டப்பாதையை சந்திரன் செல்வதால் இந்த கிரகணம் நிகழ்கிறது. இந்த கிரகண நாளில் நிலா சிவப்பும் -ஆரஞ்சும் கலந்த அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும்.
சந்திரகிரகணம்நடக்கும்தேதி மற்றும் நேரம்
இந்த சந்திர கிரகணம் ஜனவரி 20-ம் தேதி ஞாயிறு மாலை தொடங்கி 21 காலை வரை நடக்கும் எனத்தெரிகிறது. இந்த சந்திர கிரகணம் உலகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த கிரகணத்தை அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா மற்றும் லண்டனிலிருந்தே பார்க்க முடியும். ஆசியா மற்றும் இந்தியாவில் இந்த கிரகணத்தை பார்க்க முடியாது.
கிரகணநாள்குறித்தானமூடநம்பிக்கைகள்
பண்டைய கலாச்சாரம் மற்றும் நாகரீகத்தில் கிரகணத்தினால் மனித உலகில் மாற்றங்கள் நிகழும் என நம்பிக் கொண்டிருந்தது. தற்போது உள்ள விஞ்ஞானங்கள் கிரகணங்களைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கியுள்ளது. உடல் நல ஆலோசகர்கள் பலரும் மக்கள் தங்களுடைய வழக்கமான உணவுமுறைகளையே எடுத்துக் கொள்ளலாம் என்பதையே வலியுறுத்துகின்றனர். சமைக்கும் முறையிலோ அல்லது உங்கள் டயட்டிலே எந்த வித மாற்றங்களை செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றே கூறுகின்றனர்.
மூடநம்பிக்கைகளைஉடைக்கும்அறிவியல்
மக்கள் பலரும் கிரகண நேரத்தில் காய்கறிகளை வெட்டி சமைக்கும் பொழுது கிரகணத்தில் கதிர்களை காய்கறிகள் உள்வாங்கும் என்றும் அதனால் அதை சமைக்கும் போது உடல் நலனுக்கு தீங்கு ஏற்படும் என நம்புகின்றனார். ஆனால் இந்த நம்பிக்க்கையாவும் எந்தவொரு அறிவியல் அடிப்படைகள் ஏதுமற்றது என்று தெரிவித்துள்ளனர். டாக்டர் நீரவ் பிபலையா, “கிரகண கதிர்கள் நம்முடைய உணவும் பொருட்களை பாதிக்கும் என்று சொல்வது முற்றிலும் அறிவியலுக்கு புறம்பானது” எனக் கூறியுள்ளார். இதே கருத்தை நாசாவும் எதிரொலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Disclaimer: NDTV is not responsible for the accuracy, completeness, suitability, or validity of any information on this article. All information is provided on an as-is basis. The information, facts or opinions appearing in the article do not reflect the views of NDTV and NDTV does not assume any responsibility or liability for the same.
Comments