ராகி மாவு கொண்டு ஐந்து வகையான ஸ்நாக்ஸ் தயாரிக்கலாம்!!

இந்தியாவின் பழமை வாய்ந்த தானியங்களுள் ராகியும் ஒன்று.  ராகியில் புரதம் இருப்பதால் உடல் எடை குறைக்க இதனை சாப்பிடலாம்.

Translated by: Kamala Thavanidhi  |  Updated: July 13, 2019 16:01 IST

Reddit
High Protein Diet: 5 Tea-Time Ragi Snacks You May Include In Your Weight Loss Diet 
Highlights
  • ராகிமாவில் புரதம் மற்றும் நார்ச்சத்து இருக்கிறது.
  • ராகி மாவு சாப்பிடுவதால் உடல் எடை குறையும்.
  • க்ளூட்டன் ஃப்ரீ மாவுகளில் ராகியும் ஒன்று.

உடல் எடை குறைக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவுகளை சாப்பிடுவதே சிறந்தது.  இந்தியாவின் பழமை வாய்ந்த தானியங்களுள் ராகியும் ஒன்று.  ராகியில் புரதம் இருப்பதால் உடல் எடை குறைக்க இதனை சாப்பிடலாம்.  நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனை குணமாகிறது.  ராகியை கொண்டு எளிதில் மிக ருசியான ஸ்நாக்ஸை எப்படி தயாரிப்பதென்று பார்ப்போம்.  

ராகி முறுக்கு: 
பொதுவாக முறுக்கு அரிசி மாவு கொண்டு தான் தயாரிக்கப்படும்.  ஆனால் ராகி மாவு கொண்டும் முறுக்கு தயாரிக்கலாம்.  இதில் கலோரிகள் மிக குறைவு என்பதால் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.  
 

hosg9vbo

ராகி சமோசா: 
வெள்ளரி, பட்டாணி, முந்திரி ஆகியவற்றை கொண்டு ராகி மாவில் ஸ்டஃப் செய்து ராகி சமோசா தயாரித்து சாப்பிடலாம்.  மைதா கொண்டு சமோசா தயாரிப்பதை தவிர்த்து ராகி மாவு கொண்டு தயாரிக்கலாம். 

ragi samosa

 ராகி குக்கீஸ்: 
மைதா, கோதுமை போன்ற மாவுகளில் குக்கீஸ் செய்து சாப்பிடுவதையே வழக்கமாக கொண்டுள்ளோம்.  வித்தியாசமான ருசிக்கு ராகி மாவு கொண்டு குக்கீஸ் தயாரிக்கலாம்.  ராகி மாவு, நாட்டுச் சர்க்கரை ஆகியவை சேர்த்து செய்வதால் அதில் புரதம் நிறைந்திருக்கும்.  குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.  

ragi cookie

 ராகி ஓட்ஸ் லட்டு: 
ராகி மாவு, ஓட்ஸ், தேன், பேரிச்சை மற்றும் பால் சேர்த்து ராகி லட்டு செய்து சாப்பிடலாம்.  அவ்வப்போது ஏற்படும் பசியை போக்கவும் உடலுக்கு ஊட்டச்சத்துக்களை கொடுக்கவும் இதனை சாப்பிடலாம். 

Listen to the latest songs, only on JioSaavn.com

ragi ladoo

ராகி சிப்ஸ்: 
உருளைக்கிழங்கு சிப்ஸில் கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகமாக இருக்கிறது. ராகி மாவு, கோதுமை மாவு,மிளகாய் தூள், உப்பு ஆகியவை சேர்த்து சிப்ஸ் செய்து சூடாக பரிமாறலாம். Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement