Bakrid 2020: தியாகத் திருநாளின் சிறப்பு உணவுகள்

பக்ரீத் பண்டிகையின் மகத்துவத்தையும், சிறப்பு விருந்துகளைப் பற்றியும் இங்குப் பார்க்கலாம்

Edited by: Barathraj  |  Updated: July 30, 2020 12:11 IST

Reddit
Bakrid 2020 Date In India And Foods

பக்ரீத் கொண்டாட்டம் 2020

Highlights
  • இந்தியாவில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி பக்ரீத் கொண்டாடப்படுகிறது
  • ஹஜ் புனித யாத்திரைக்கு சிறப்பு வாய்ந்தது
  • பல்வேறு விதமான உணவுகள் விருந்து வைக்கப்படுகின்றன

ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு பண்டிகையிலும் குறிப்பிட்ட உணவு வகைககள் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில், பக்ரீத் 2020 தியாகத் திருநாள் பண்டிகையின் சிறப்புகளையும், இந்த விசேஷமான நாளுக்கான உணவு குறித்தும் இங்குப் பார்க்கலாம்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் வந்துவிட்டாலே பண்டிகை காலம்தான். இந்த காலக்கட்டத்தில் இந்தியாவிலும் மற்ற இஸ்லாமிய நாடுகளிலும் பக்ரீத் பண்டிகை சிறப்பு வாய்ந்தது. பக்ரீத் என்பது பக்ரா ஈத், ஈத்-அல்-ஆதா அல்லது ஈத்-உல்-ஜுஹா என்றும் அழைக்கப்படுகிறது.  இது முஸ்லிம் சமூகத்தின் இரண்டாவது ஈத் கொண்டாட்டமாகும் - முதலாவது ஈத்-அல்-பித்ர்.

இந்தியாவில் இந்தாண்டு பக்ரீத் பண்டிகை, (ஜூலை 30) வியாழக் கிழமை மாலை தொடங்குகிறது. பின்னர், சிறப்பு தொழுகைகளுடன் ஜூலை 31 வெள்ளிக்கிழமை நிறைவடைகிறது. பக்ரீத் பண்டிகையை ஒட்டியே ஹஜ் புனித யாத்திரை நடைபெறுகிறது. இதனால், இது யாத்திரை மாதம் என்றும் கருதப்படுகிறது.  

ni3lrf58

பக்ரீத் கொண்டாட்டத்தின் முக்கியத்துவம்:
ஈத்-அல்-ஆதா அல்லது பக்ரீத் பண்டிகை என்பது ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. இஸ்லாம் புராணங்களின்படி, இறைவன் மீதான பக்தியை நிரூபிக்க நபி இப்ராஹிம் தனது சொந்த மகனை தியாகம் செய்யத் துணிந்தார். அப்போது நபி தனது மகனின் தலையை கடவுளுக்கு வழங்கும் போது, சிஃப்ரயீல் எனும் வானவரை இறைவன் அனுப்பினர். அப்போது,  ஒரு ஆட்டை கொடுத்து இஸ்மாயிலுக்கு பதிலாக அந்த ஆட்டை பலியிடுமாறு கட்டளைப் பிறப்பித்தார். இப்ராகமின் இந்த தியாக நாளை நினைவு கூறும் விதமாகத்தான் பக்ரீத் தியாகத் திருநாள் கொண்டாடப்படுகிறது. 

Listen to the latest songs, only on JioSaavn.com

34igg6c8

பக்ரீத் நோன்பும் விருந்தும் 

ஈத்-அல்-ஆதா விருந்துக்கு கபாப்ஸ் ஒரு சிறந்த தொடக்கமாக அமைகிறது. கோழி அல்லது ஆட்டிறைச்சியால் செய்யப்பட்ட சீக் கபாப்ஸ் விருந்து இந்தப் பண்டிகையில் சிறப்பானதாகும். அதே போல், மட்டன் சாப்பாடும் ஒரு அங்கம் வகிக்கிறது. நல்ல ஒரு சுவையான மட்டன் பிரியாணியும், அத்துடன் சில மட்டன் புலாவோ உணவுகள் விருந்தில் பரிமாறப்படுகின்றன. இதற்கு மேலும் சுவையூட்டும் விதமாக நிஹாரி, ரான் போன்ற மட்டன் கிரேவி விருந்துகளும் வைக்கப்படுகின்றன. 

Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement