அளவுக்கு அதிகமாக சாப்பிடலாமா? நிபுணர்கள் கூறும் பதில் உங்களை ஆச்சரியப்படுத்தலாம்!

பசியுணர்வு,  உணவு சாப்பிடும் மனநிலை ஆகியவற்றைப் பொறுத்து தான் நாம் சாப்பிடும் உணவின் அளவும் மாறுபடுகிறது

  |  Updated: August 04, 2020 11:04 IST

Reddit
Want To Eat More Pizza But Feeling Full? Should You Indulge In Overeating? The Answer Will Surprise You

பசி இல்லாத நிலை இருக்கும் போது சாப்பிடலாமா?

Listen to the latest songs, only on JioSaavn.com

என்னதான் வயிறு நிரம்பியிருந்தாலும், சுவையான உணவு பதார்த்தங்களை பார்த்தால் இன்னும் சாப்பிட வேண்டும் போலிருக்கும். சிலருக்கு இப்படியான சம்பவங்களும் நடந்திருக்கும். வீட்டில் வழக்கம் போல் சாம்பார் சாதம் சாப்பிட்டிருப்பார்கள். சாப்பிட்டு முடிக்கவும், நண்பர்கள் சொல்லாமல் கொள்ளாமல் சிக்கன், மட்டன் வாங்கி வருவார்கள்.

சில நிமிடங்களுக்கு முன்புதான் நீங்கள் சாம்பார் சாதம் சாப்பிட்டு பசி அடங்கியிருப்பீர்கள். வயிறு நிரம்பியிருக்கும். ஆனால், திடீரென சிக்கன், மட்டனைப் பார்த்ததும் நாவில் எச்சில் ஊறும். மாறாக பசியிருக்காது. 

இவ்வாறு பசி இல்லாத நிலை இருக்கும் போது சாப்பிடலாமா? அவ்வாறு சாப்பிட்டால் என்னவாகும் என பலருக்கும் சந்தேகம் இருக்கும். இதற்கு விடை காணும் வகையில், ஊட்டச்சத்து நிபுணர்கள் ஒரு சோதனை நடத்தினர். 

28 வயதுள்ள 14 பேரை இந்த ஆய்வுக்கு உட்படுத்தினர். ஒரு புறம் சராசரியாக சாப்பிடுபவர்கள். மறுபுறம் அளவுக்கு அதிகமாக சாப்பிடுபவர்கள் என வகுத்துக் கொண்டு இரண்டு குழுக்களுக்கு பீட்சா வழங்கினர். சராசரியாக சாப்பிடுபவர்கள், ஒரு கட்டத்துக்கு மேல் பீட்சாவை சாப்பிட முடியாமல், போதும் என்று சொல்லி விட்டனர். மறுபுறத்தில் உள்ளவர்களில் சிலர், பசி அடங்கிய பின்னரும் பீட்சா சுவை மயக்கத்தால் ஒரு துண்டு கூட விட்டு வைக்காமல் முழுவதுமாக சாப்பிட்டனர்.

இதனையடுத்து அனைவருக்கும் உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டது. முடிவில் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டவர்களின் இரத்தத்தில் குளுகோஸ் அளவு கிட்டத்தட்ட சராசரியாக சாப்பிடுவர்களுக்கு உள்ளதைப் போன்றே இருந்தது. அதே நேரத்தில் இன்சுலின் அளவு 50 சதவீதம் அதிகரித்துக் காணப்பட்டது.  சுருக்கமாக சொல்வதென்றால் அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு இரு மடங்கு சக்தி கிடைத்தது. 

பசியுணர்வு, உணவு சாப்பிடும் மனநிலை ஆகியவற்றைப் பொறுத்துதான் நாம் சாப்பிடும் உணவின் அளவும் மாறுபடுகிறது. மாறாக நல்ல பசியுணர்வும், நல்ல உற்சாகமான மனநிலையும் இருக்கும்பட்சத்தில் சற்று அதிகம் சாப்பிடுவது தவறில்லை. ஆனால், பசி அடங்கிய பிறகும் சாப்பிட்டால், அது சோம்பலுக்கும், சில நேரங்களில் உடல் உபாதைகளுக்கும் வழிவகுக்கும்.

நீங்கள் அதிகம் சாப்பிடுபவராக இருந்தால், அதற்கு ஏற்றவாறு தினசரி உடற்பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும். பொதுவாக பசி உணர்வு ஏற்பட்டு அரை மணி நேரம் கழித்து சாப்பிடுவது நல்லது. சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் உணவு சக்தி முழுமையும் பெற முடியும்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

சம்பந்தமுள்ள கட்டுரைகள்:
Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement