புரதத்தேவையை பூர்த்தி செய்யும் 5 உணவுகள்!!

பேக்கான், சாசேஜ் போன்ற உணவுகள் இருதய ஆரோக்கியத்தை கெடுக்கக்கூடியது.  மேலும் இவை உடல் பருமனாக செய்யும். 

Edited by: Kamala Thavanidhi  |  Updated: September 22, 2019 19:35 IST

Reddit
High Protein Diet: 5 Healthy Switches That May Amp Up Your Protein Intake
Highlights
  • உடலை ஃபிட்டாக வைத்திருக்க புரதம் உணவுகளை சாப்பிடலாம்.
  • பசியை தூண்டக்கூடிய ஹார்மோன்களை சீராக சுரக்க செய்ய புரதம் தேவை.
  • முட்டை, கோழி, மீன், சீஸ் ஆகியவற்றில் புரதம் அதிகமாக இருக்கிறது.

உடலுக்கு மிகவும் தேவையான சத்துக்களுள் ஒன்று புரதம்.  உடல் எடை குறைக்க புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வரலாம்.  தொடர்ச்சியாக புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதுடன் ஃபிட்டாகவும் இருக்கலாம்.  வீட்டிலேயே சில சுவையான ரெசிபிகளை செய்து சாப்பிடலாம்.  குறிப்பாக புரதம் நிறைந்த ரெசிபிகளை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். 

முட்டை:

காலை உணவிற்கு நாம் சாப்பிடக்கூடிய செரல்களில் செயற்கையாக சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது.  இதில் இருக்கக்கூடிய சர்க்கரை உடல் பருமனை அதிகரிக்கக்கூடும்.  தினமும் முட்டை அல்லது ஓட்ஸை காலை உணவாக சாப்பிடலாம்.  முட்டையில் உடலுக்கு தேவையான புரதம் இருக்கிறது.  தினமும் காலையில் ஒரு முட்டை சாப்பிட்டு வரலாம். fovg49ro

 

சப்பாத்தி:

மைதா சேர்த்து செய்யப்படும் உணவுகளை தவிர்ப்பது உடலுக்கு மிகவும் நல்லது.  முழுகோதுமையில் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து இருப்பதால் காலை நேரத்தில் சப்பாத்தி சாப்பிடலாம்.  உடல் எடை குறைக்க நினைத்தால் பூரி, பராத்தா போன்ற ரெசிபிகளை தவிர்க்கலாம். 

கிரீக் யோகர்ட்:

யோகர்ட்டில் புரதம், கால்சியம் போன்ற சத்துக்கள் இருக்கிறது.  கிரீக் யோகர்ட்டில் புரதம் அதிகபடியாக இருக்கிறது.  ஹங் கர்டில் இரண்டு மடங்கு புரதம் இருக்கிறது.  கிரீக் யோகர்ட்டில் சோடியத்தின் அளவு மிகவும் குறைவாக இருக்கிறது. 

qd4omq2கோழி மற்றும் மீன்:

பேக்கான், சாசேஜ் போன்ற உணவுகள் இருதய ஆரோக்கியத்தை கெடுக்கக்கூடியது.  மேலும் இவை உடல் பருமனாக செய்யும்.  கோழி மற்றும் மீன் ஆகிய இரண்டிலுமே உடலுக்கு தேவையான சத்துக்கள் இருக்கிறது.  பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து இதனை சாப்பிடலாம்.  இதில் புரதம் அதிகமாகவும், கொழுப்பு மிகவும் குறைவாகவும் இருக்கிறது. 

காட்டேஜ் சீஸ்:

Listen to the latest songs, only on JioSaavn.com

சீஸில் கால்சியம், புரதம் மற்றும் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்து இருக்கிறது.  ஃபெட்டா சீஸ் மற்றும் காட்டேஜ் சீஸ் ஆகிய இரண்டும் ஆரோக்கியம் நிறைந்தது.  இவற்றை அடிக்கடி உணவில், சாலட்டில் சேர்த்து சாப்பிடலாம். 

 

Comments

eqj7b8j
 


உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement