சர்க்கரை நோயாளிகள் ஆப்பிள் பழம் சாப்பிடலாமா...?

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தாவிட்டால் கிட்னி ஃபெய்லியர், ஒபிசிட்டி, மற்றும் இதய நோய் ஆகியவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்

एनडीटीवी फूड डेस्क  |  Updated: March 05, 2019 15:18 IST

Reddit
Diabetes Management: Here's What Makes Apple An Ideal Fruit For Diabetics
Highlights
  • நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டால் மருத்துகளை நேரத்திற்கு சாப்பிடவே
  • நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்
  • ஆப்பிள் டயட் பட்டியலில் இருக்க வேண்டிய ஒன்று

சர்க்கரை நோய் என்பது இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையை குறிப்பிடுவதாகும். உடலின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த போதுமான இன்சுலின் சுரப்பு போதுமானதாக இல்லை இல்லை என்றாலோ அல்லது சுரக்கும் இன்சுலின் அளவிற்கு உடல் கட்டுப்பட மறுத்துவிட்டால் அதுவே சர்க்கரை நோயாகும். நீரிழிவு நோய் தற்போது உலகின் மிகவும் பரவலான வளர்சிதை மாற்ற கோளாறுகளில் ஒன்றாகும். லான்செட் பத்திரிகை நடத்திய ஆய்வில் 2030-ல் சீனாவை அடுத்து இந்தியா மற்றும் அமெரிக்கா வாழ் மக்களில் பாதிப் பேருக்கு டைப் 2 சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கிறது. இளைஞர்கள் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். சர்க்கரை நோய் குறித்து போதி விழிப்புணர்வும் சரியான நேரத்தில் அதைக் கண்டறியாமல் இருப்பதும் உலகெங்கிலும் நடைபெறுகிறது. சர்க்கரையைக் கட்டுப்படுத்துதல என்பது கடினமான காரியமாகவே இருந்து வருகிறது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தாவிட்டால் கிட்னி ஃபெய்லியர், ஒபிசிட்டி, மற்றும் இதய நோய் ஆகியவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.  

சமீபத்தில் நீரிழிவு நோய் இருப்பது என்பது கண்டறியப்பட்டால் அதற்கான மருத்துகளை நேரத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். டயட்டில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். சர்க்கரை உள்ள உணவுப் பொருட்கள், ட்ரான்ஸ் ஃபேட் மற்றும் ஜங்க் புட் ஆகியவற்றை தவிர்த்து விட வேண்டும். நார்ச்சத்து அதிகமுள்ள கார்ப்போஹைட்ரேட் குறைவான உணவுகளை  சாப்பிட வேண்டும். சீசனுக்கேற்ற பழங்கள் மற்றும் காய்கறிகளை நிச்சயம் எடுத்துக் கொள்ள வேண்டும். க்ளைசெமிக் இன்டெக்ஸ் குறைவான உணவுப் பொருட்களை சாப்பிடுவது நல்லது. 

ஆப்பிள் நிச்சயமாக சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு பழமாகும். சர்க்கரை நோயாளிகள் டயட்டில் நிச்சயம் இருக்க வேண்டிய பழங்களி இதுவும் ஒன்று. 

tmltg9io

 

1. நார்ச்சத்து நிறைந்தது

 ஆப்பிளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது சர்க்கரையின் அளவை முறைப்படுத்துகிறது. டிகே பப்ளிஷிங்கில் வெளியிட்ட ‘ஹீலிங் புட்ஸ்'  என்ற புத்தகத்தில் நார்ச்சத்து செரிமானத்திற்கு மிகவும் ஏற்றது என்று தெரிவித்துள்ளது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. 

2. குறைவான க்ளைசெமிக் இன்டெக்ஸ்  

க்ளைசெமிக் இண்டெக்ஸ்  என்பது ஒரு உணவில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவில் ஏற்படும் மாற்றத்தையே க்ளெசெமிக் இண்டெக்ஸ் என்று குறிப்பிடுகிறோம். ஆப்பிள் பழத்தின் க்ளெசெமிக் இண்டெக்ஸ் 38 மட்டுமே. 

3. குறைவான கார்ப்போஹைட்ரேட் கொண்டது

Listen to the latest songs, only on JioSaavn.com

100 கிராம் ஆப்பிளில் 14 கிராம் கார்போஹைட் ரேட் உள்ளது. ஆப்பிளை நிச்சயமாக டயட்டில் வைக்க வேண்டிய சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். 


Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.
 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement