இவற்றை குடித்தால் இரத்த அழுத்தம் குறையும்!!!

தர்பூசணியில் பொட்டாசியம், லைக்கோபீன், ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் பீட்டா கெரட்டின் இருப்பதால் இரத்த அழுத்தத்தை சீராக வைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.  

Translated by: Kamala Thavanidhi  |  Updated: May 30, 2019 15:32 IST

Reddit
Hypertension Diet: This Summer Juice May Help Keep Your Blood Pressure Levels In Check
Highlights
  • உயர் இரத்த அழுத்தம் இருதய நோய்களுக்கு வழிவகுக்கும்.
  • உயர் இரத்த அழுத்தம் இருந்தால் பக்கவாதம் ஏற்படும்.
  • தர்பூசணியில் பொட்டாசியம் அதிகம் உள்ளது.

தற்போதைய வாழ்வியல் சூழலில் கொலஸ்ட்ரால், நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற உடல் உபாதைகள் இல்லாத ஆட்களே இல்லை.  உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் உப்பு மற்றும் எண்ணெய் உணவுகளை சாப்பிட கூடாது.  இவை இருதய ஆரோக்கியத்தை பாதிக்கும்.  குறிப்பாக கோடை காலத்தில் தான் உயர் இரத்த அழுத்த பாதிப்பு இருக்கும்.  இதனை சரிசெய்ய பழங்கள், காய்கறிகள் மற்றும் மூலிகைகளை சேர்த்து கொள்ளலாம்.  உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் இந்த எனர்ஜி ட்ரிங்கை எப்படி தயாரிப்பது என்றும் அதன் பலங்கள் குறித்தும் பார்ப்போம்.  



தர்பூசணி:

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உணவில் உப்பு சுவையை குறைத்தே சாப்பிட வேண்டும்.  ஏனெனில் அதில் இருக்கக்கூடிய சோடியத்தின் அளவு, இரத்த நாளங்களை அழுத்தத்தை அதிகரிக்கும்  இதனால் இரத்த ஓட்டம் அதிவேகமாக பாய்வதால் இருதய கோளாறுகளும் ஏற்படும்.  பொட்டாஷியம் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்து கொள்வதால் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது.  தர்பூசணியில் பொட்டாசியம், லைக்கோபீன், ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் பீட்டா கெரட்டின் இருப்பதால் இரத்த அழுத்தத்தை சீராக வைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.  



புதினா:

இரத்த ஓட்டத்தை சீராக வைக்கும் திறன் புதினாவில் உள்ளது.  தினசரி புதினாவை உணவில் சேர்த்து கொண்டால் இரத்த அழுத்தம் சீராக இருப்பதுடன் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.  



s4mgppo
 

சீரகத்தூள்:

சீரகத்தை வறுத்து பொடி செய்து கொள்ளவும்.  ஒரு சிட்டிகை சீரகத்தூள் சேர்த்து கொண்டால் இருதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.  இதில் பொட்டாசியத்தின் அளவும் அதிகம் உள்ளது. 



கல் உப்பு:

நாம் வழக்கமாக பயன்படுத்தும் தூள் உப்பை தவிர்த்துவிட்டு, கல் உப்பை பயன்படுத்தலாம்.  கல் உப்பை உணவில் சேர்த்து கொண்டால் இரத்த அழுத்தம் குறைவதோடு உடலில் கொலஸ்ட்ராலின் அளவும் குறையும். 



தர்பூசணி புதினா ஜூஸ் எப்படி தயாரிப்பது?



தேவையானவை:

விதை நீக்கப்பட்ட தர்பூசணி -1 

புதினா இலைகள் - 2 மேஜைக்கரண்டி 

சீரகத்தூள் - 1 தேக்கரண்டி 

கல் உப்பு - 1 தேக்கரண்டி 



செய்முறை:

விதை நீக்கிய தர்பூசணி பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் சேர்த்து கொள்ளவும்.  அத்துடன் புதினா இலைகள், சீரகத்தூள், கல் உப்பு ஆகியவற்றை சேர்த்து கொள்ளவும். வடிகட்டாமல் அப்படியே குடிக்கலாம்.  

Listen to the latest songs, only on JioSaavn.com





Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement