சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பு குறித்து பிரபல அழகு கலை நிபுணர் என்ன சொல்கிறார்???

கோடை காலத்தில் டீ, காபி குடிப்பதை தவிர்த்து லெமன் ஐஸ்டு டீ, ஜல்ஜீரா, லஸ்ஸி, மோர், தேன் சேர்க்கப்பட்ட யோகர்ட் அல்லது பழச்சாறுகளை குடிக்கலாம்.

  |  Updated: April 30, 2019 18:28 IST

Reddit
Shahnaz Husain Suggests Foods For Young And Glowing Skin This Summer
Highlights
  • இயற்கை உணவுகளை சாப்பிடுவதால் சருமம் பிரகாசிக்கும்.
  • நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
  • கீரைகள் மற்றும் காய்கறிகள் சரும ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் குறித்து பெரிய விவாதமே தற்போது ஆங்காங்கு நடந்து கொண்டிருக்கிறது.  நம் முன்னோர்கள் இயற்கை உணவுகளையே உண்டனர் என்பதாலேயே ஆரோக்கியமாக இருந்தார்கள்.  பழங்கள், சாலட், முளைக்கட்டிய தானியங்கள், பருப்புகள், விதைகள், கொட்டைகள் மற்றும் தயிர் ஆகியவை இயற்கையான உணவுகள்.  உடலுக்கு உடனடியாக ஆற்றல் தரக்கூடியவை.  இவையே நம் தினசரி உணவில் அதிகளவு இருக்க வேண்டும்.  கொழுப்பு மற்றும் இனிப்பு உணவுகளை தவிர்ப்பது நல்லது.இந்த இயற்கை உணவுகள் உங்கள் சருமத்தை இளமை தோற்றத்துடனும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்கும்.  நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ என்ன அருந்துகிறீர்களோ அதை பொருத்துதான் உங்கள் சருமம் பிரகாசிக்கும்.  கொழுப்பு, சர்க்கர மற்றும் இறைச்சி ஆகியவற்றை குறைத்து, பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை அதிகம் சாப்பிடலாம்.  சரும ஆரோக்கியத்திற்கு யோகர்ட், ஸ்கிம்டு மில்க் மற்றும் பனீர் ஆகியவை சிறந்தது.  காய்கறிகளை எப்போது முழுமையாக வேக வைக்கக்கூடாது.  கீரைகள் மற்றும் லீட்யூஸ், சூப் ஆகியவற்றை சாப்பிடலாம். 

6kkk4rvo

 

அந்தந்த பருவநிலை மாற்றத்தின்போது விளையும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது சிறந்தது.  கோடை காலத்தின்போது உடலில் நீரிழப்பு ஏற்படும் என்பதால் தர்பூசணி, முலாம்பழம் மற்றும் வெள்ளரி ஆகியவற்றை சாப்பிடலாம்.  நீராகாரம் அதிகம் உட்கொண்டால் மட்டுமே, இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.  உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும்.  உடலில் கழிவுகள் தேங்கும்போது சருமம் தன் பொலிவை இழந்துவிடும்.  மேலும் உப்பு சுவை குறைந்த உணவை சாப்பிட வேண்டும்.  அப்படியில்லாவிட்டால், சருமம் அதன் இளமை தோற்றத்தை இழந்துவிடும். காலை எழுந்தவுடன் தினமும் ஒரு க்ளாஸ் தண்ணீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வரலாம்.  இதனால் சருமம் பிரகாசமாகவும் ஈரப்பதத்துடனும் இருக்கும்.  குளிர்பானங்கள் குடிப்பதை குறைத்துவிட்டு, பழச்சாறுகளை அடிக்கடி குடிக்கலாம்.  கோடை காலத்தில் டீ, காபி குடிப்பதை தவிர்த்து லெமன் ஐஸ்டு டீ, ஜல்ஜீரா, லஸ்ஸி, மோர், தேன் சேர்க்கப்பட்ட யோகர்ட் அல்லது பழச்சாறுகளை குடிக்கலாம்.

Listen to the latest songs, only on JioSaavn.comசரும பிரச்னைகளை உடனடியாக சரிசெய்திட வேண்டும்.  ஆர்கானிக் உணவுகளை சாப்பிட்டால் தான் சருமம் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கும்.  அழகு பராமரிப்பின் ஆயுர்வேதத்திற்கு முக்கிய பங்கு உண்டு.  நம் பாரம்பரியத்தை பின்பற்றினாலே போதும்.  ஆரோக்கியமாக வாழலாம் என்கிறார் பிரபல அழகு கலை நிபுணர் ஷனாஸ் ஹுசைன்.

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement