பாரம்பரிய சுவையில் சுக்கு காபி தயாரிப்பது எப்படி??

கொழும்புவில் சுக்கு காபி தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களுடன் காபி தூள் சேர்த்து புதுவிதமான ருசியில் காபி பரிமாறப்படுகிறது. 

Translated by: Kamala Thavanidhi  |  Updated: August 19, 2019 12:30 IST

Reddit
Sukku Kaapi: This Traditional Coffee And Tea Alternative Is Back In The Mix
Highlights
  • சுக்கு காபியில் பால் சேர்க்க தேவையில்லை.
  • உலர்த்திய இஞ்சியில் வீரியத்தன்மை அதிகம் உள்ளது.
  • இந்த பானத்தை அடிக்கடி குடித்து வந்தால் செரிமானம் சீராக இருக்கும்.

நம் பாரம்பரிய பானங்களுள் சுக்கு காபியும் ஒன்று.  இஞ்சியை உலர்த்தி சுக்கு என்ற பெயரில் பயன்படுத்தப்படுகிறது.  இஞ்சி மருத்துவ குணம் மிகுந்ததென்பதால் இதனை பெரும்பாலான பானங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.  கொழும்புவில் சுக்கு காபி தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களுடன் காபி தூள் சேர்த்து புதுவிதமான ருசியில் காபி பரிமாறப்படுகிறது.  இந்த காபி பொடியை பாலுடன் அல்லது தண்ணீரில் சேர்த்து குடிக்கலாம்.    

filter coffee

 

இஞ்சி, கொத்தமல்லி விதை, மிளகு, சீரகம் ஆகியவை சேர்த்து சுக்கு காபி தயாரிக்கப்படுகிறது.  இதில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருப்பதால்  உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.  இதனை குடிப்பதால் தொண்டை கரகரப்பு மற்றும் செரிமான பிரச்னை குணமாகிறது.  குர்கான் போன்ற நகரங்களில் சாப்பிட்ட பிறகு சுக்கு காபி பரிமாறப்படுகிறது.  அதேபோல கேரளாவில் சுலைமாணி தேநீர்.  சுக்கு காபியில் பனை வெல்லம் சேர்ப்பதால் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கிறது.  பால் குடிக்க பிடிக்காதவர்கள் இந்த சுக்கு காபியை குடிக்கலாம்.  சுக்கு காபியை எப்படி வீட்டிலேயே தயாரிப்பதென்று பார்ப்போம்.  

தேவையான பொருட்கள்: 

தண்ணீர் - 300 மில்லி 

சுக்கு - 1-5 தேக்கரண்டி 

பனை வெல்லம் - 2 மேஜைக்கரண்டி 

செய்முறை: 

* அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றவும்.  தண்ணீர் நன்கு கொதித்தவுடன் அதில் உலர்த்திய இஞ்சி தூள் மற்றும் பனை வெல்லம் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டி பரிமாறவும்.  

சுக்கு மல்லி காபி தயாரிக்க: 

உலர்த்திய இஞ்சித்தூள் -  2 மேஜைக்கரண்டி 

கொத்தமல்லி விதை - 11/2 மேஜைக்கரண்டி 

மிளகு - 1 மேஜைக்கரண்டி 

சீரகம் - 1 மேஜைக்கரண்டி 

கிராம்பு - 1-2 

செய்முறை: 

* மேற்கூறிய அனைத்து பொருட்களையும் நன்கு வறுத்து பொடியாக அரைத்து கொள்ளவும். 

* சுக்கு காபி தயாரிக்க இந்த பொடியிலிருந்து ஒரு தேக்கரண்டி எடுத்து கொண்டால் போதும். அத்துடன் பனை வெல்லம் சேர்த்து கொள்ளலாம். 

* நீங்கள் இத்துடன் ஃபில்டர் காபி பொடியை பயன்படுத்த நினைத்தால் பாரம்பரிய ஃபில்டர் காபி தயாரிப்பு முறையை பின்பற்றலாம். அத்துடன் தண்ணீர் மற்றும் பனை வெல்லம் சேர்த்து கொள்ளலாம்.  

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய சமையல்

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com