எடை குறைய தூங்குவதற்கு முன் குடிக்க வேண்டிய 3 வகை பானங்கள்

எடையை குறைப்பது எளிதான காரியமல்ல- இதற்கு ஒரு சீரான டயட் மற்றும் முறையான உடல் பயிற்சி செய்ய வேண்டும்

   |  Updated: July 05, 2018 20:24 IST

Reddit
Weight Loss: Consume These 3 Drinks Just Before Bedtime To Lose Weight Fast!
Highlights
  • பட்டை டீயை தூங்கும் முன் அருந்திளால் உடலின் வளர்சிதைமாற்றம் ஊக்கமளிக்கும்
  • வெந்தயத்தை உண்பதால் உடலின் வெப்பம் சீராகும்
  • கெமோமில் டீயை அருந்தினால் உங்களுக்கு ஒரு அமைதியான தூக்கம் கிடைக்கும்
நீங்கள் கூடுதல் எடையை குறைக்க விரும்புபவர்களில் ஒருவராக இருந்தால் இந்த கட்டுரை உங்களுக்கானது. எடையை குறைப்பது எளிதான காரியமல்ல- இதற்கு ஒரு சீரான டயட் மற்றும் முறையான உடல் பயிற்சி செய்ய வேண்டும். எனினும், எடை குறைக்கும் வழி முறையில் ஒன்றாக , நீங்கள் படுக்கைக்கு செல்வதற்கு முன்பு பின்பற்ற வேண்டிய ஒரு சில உணவு பழக்கங்கள் உள்ளன. இவை எளிமையானவை. உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உங்கள் செரிமான செயல்பாட்டை அதிகரித்து எடை இழக்க உதவுகிறது.
 
weight loss

இதோ உங்களின் எடையை குறைக்க தூங்குவதற்கு முன் பின்பற்ற வேண்டிய சில உணவு வகைகள்

 
weight compliment

பட்டை டீ (cinnamon tea)
Newsbeep

Listen to the latest songs, only on JioSaavn.com

பட்டை பல ஆரோக்கிய நலங்களைக் கொண்டுள்ளது.இதை தூங்குவதற்கு முன்னர் டீயாக அருந்துவதால் உடலின் வளர்சிதைமாற்றத்திற்கு பெரும் ஊக்கத்தை தருகிறது. இதை மேலும் சுவையாக்க தேனுடன் சேர்த்து சாப்பிடலாம். பட்டை டீயை தயாரிப்பதற்கு உங்களுக்கு தேவையானது, 1 கப் சுடு தண்ணீர் மற்றும் 1 டீஸ்பூன் பட்டைத் தூள்.இதை ஒன்றாக கலந்து 20 -30 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள். சிறந்த முடிவுகளை பெற தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் இதை அருந்துங்கள்.
 
cinnamon
 
ஊறவைத்த வெந்தயம்(Soaked Fenugreek seeds)

வெந்தயம் எடை குறைப்புக்கு பெரிதும் உதவுவதாக டாக்டர் அஷுத்தோஷ் கூறுகிறார். மேலும் வெந்தயத்தை உண்பதால் உடலின் வெப்ப நிலை சீராவதோடு, எடை குறைவதற்கும் உதவுகிறது. இது செரிமான மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது.இதை தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு அல்லது ஒரு மணி நேரத்திற்கு முன்னர் அருந்துங்கள். தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் நசுக்கிய வெந்தயத்தை சேறுங்கள். குறைந்தபட்சம் மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரை இதை மூடி வைக்கவும். இதன் நன்மைகளை பெற, வழக்கமான டீ வடிகட்டி மூலம் இதை கப்பில் வடிகட்டி எடுங்கள்.
 
fenugreek seeds

கெமோமில் டீ(Chamomile Tea)

Commentsகெமோமில்(செவந்தி) எடை குறைவடைய மட்டும் செய்யாமல், உடலில் உள்ள வீக்கத்தை குறைக்கவும் செய்கிறது. இது கால்சியம், பொட்டாசியம் மற்றும் ஃபிளாவோனாய்டுகளை கொண்டது, உடலிலிருந்து நச்சுகள் மற்றும் அதிகப்படியான தண்ணீரை வெளியேற்றுவதற்கான திறனையும் கெமோமில் கொண்டுள்ளது. தூங்குவதற்கு முன் ஒரு கப் சூடான கெமோமில் டீயை அருந்தினால் உங்களுக்கு ஒரு அமைதியான தூக்கம் கிடைக்கும்.
 
chamomile tea


உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement