குழந்தைகள் ஆரோக்கியமாக வளர வாழைப்பழம் கொடுக்கலாம்!!

குழந்தைகளுக்கு ஃபோலேட் நிச்சயம் தேவைப்படும்.  அதற்காக வாழைப்பழத்தை மசித்து கொடுக்கலாம்.  உடலில் இரத்த சிவப்பு மற்றும் வெள்ளை அணுக்கள் உற்பத்தி செய்ய இது உதவுகிறது.  ஃபோலிக் அமிலம், இருதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்றவற்றை தடுக்கிறது.  

Translated by: Kamala Thavanidhi  |  Updated: August 30, 2019 18:08 IST

Reddit
Banana Nutrition: Your Favourite Fruit Contains This Much Fat!
Highlights
  • வாழைப்பழத்தில் ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கிறது.
  • பொட்டாஷியம் நிறைந்திருப்பதால் இரத்த அழுத்தம் சீராகும்.
  • உடனடி ஆற்றலுக்கு வாழைப்பழத்தை சாப்பிடலாம்.

எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய பழம் வாழைப்பழம்.  இதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.  வாழைப்பழம் கொண்டு சிப்ஸ், ஜெல்லி, சப்ஜி போன்ற ரெசிபிகளை செய்து சாப்பிடலாம்.  வாழை மரத்தில் இருக்கக்கூடிய எல்லா பாகங்களுமே மிகவும் பயன்படக்கூடியவை.  வாழைப்பூ, வாழை நார், வாழை மட்டை, வாழை தண்டு, வாழைக்காய் என எல்லாமே மருத்துவ குணம் கொண்டவை.  வாழைப்பழத்தின் மேலும் சில ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்ப்போம்.    70 கிராம்: 1 வாழைப்பழம்
 கலோரிகள் 77.45Kcal
 கார்போஹைட்ரேட்17.46gm
கொழுப்பு 0.22gm
 புரதம்0.87gm
நார்ச்சத்து1.54gm
ஃபோலேட்13.96µg
வைட்டமின் C 5.6mg
மக்னீஷியம்21.15mg
பாஸ்பரஸ்14.59mg
பொட்டாஷியம்253.4mg

 
                
கலோரிகள்: 

ஒரு வாழைப்பழத்தில் 100 கிலோ கலோரிகள் இருக்கும்.  இதனை மதிய உணவிற்கு பின் தினமும் ஒன்று என்ற வீதத்தில் சாப்பிடலாம்.  இதில் வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்திருக்கிறது. 

கார்போஹைட்ரேட்: 

வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் இருப்பதால் உடலுக்கு உடனடி ஆற்றலை கொடுக்கும்.  உடற்பயிற்சிக்கு முன் சாப்பிட சிறந்த உணவு.  இதில் க்ளைசமிக் இண்டெக்ஸ் குறைவாக உள்ளதால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காது.  

 

dl9g6gn8

 

கொழுப்பு: 

வாழைப்பழத்தில் 22 கிராம் கொழுப்பு உள்ளது.  ஆனால் இது உடலில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாய் இருக்காது.  

நார்ச்சத்து: 

வாழைப்பழத்தில் பெக்டின் என்னும் நார்ச்சத்து இருக்கிறது.  செரிமானத்திற்கு உதவும் வாழைப்பழம் சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் மற்றும் லிபிட் போன்றவற்றை இரத்தத்தில் இருந்து குறைக்கும் தன்மை உள்ளது.  

ஃபோலேட்: 

குழந்தைகளுக்கு ஃபோலேட் நிச்சயம் தேவைப்படும்.  அதற்காக வாழைப்பழத்தை மசித்து கொடுக்கலாம்.  உடலில் இரத்த சிவப்பு மற்றும் வெள்ளை அணுக்கள் உற்பத்தி செய்ய இது உதவுகிறது.  ஃபோலிக் அமிலம், இருதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்றவற்றை தடுக்கிறது.  

பொட்டாஷியம்: 

இரத்த அழுத்தத்தை சீராக வைக்க பொட்டாஷியம் மிகவும் அவசியமானது.  உடலில் உப்பு சத்தால் ஏற்படும் பாதிப்பை போக்க பொட்டாஷியம் நிறைந்த வாழைப்பழத்தை சாப்பிடலாம்.  இருதய துடிப்பு, மூச்சுத்திணரல், நரம்பு சம்பந்தமான பிரச்னை ஆகியவற்றை சரி செய்ய பொட்டாஷியம் தேவைப்படுகிறது.  

 

 

 Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement