உடல் உபாதைகளை போக்கும் டீ!!

மாதவிடாய் காரணமாக வயிற்று வலி ஏற்பட்டால் அரை தேக்கரண்டி சோம்பு எடுத்து டீயில் போட்டு குடிக்கலாம்.  இப்படி செய்து வந்தால் வயிற்று வலி நொடியில் குணமாகிவிடும்.  

  | Translated by: Kamala Thavanidhi  |  Updated: June 11, 2019 18:13 IST

Reddit
Amazing Tea Hacks That Will Solve Your Common Health Problems
Highlights
  • சூடான தேனீர் உங்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.
  • தேனீரில் துளசி இலைகளை சேர்த்து குடிக்கலாம்.
  • தேனீரில் சோம்பு சேர்த்து குடித்தால் வயிற்று வலி குணமாகும்.

காபி பிரியர்களை போலவே டீ பிரியர்களும் இருக்கவே செய்கிறார்கள்.  நம்மில் நிறைய பேர் டீ குடித்தே உயிர் வாழவும் செய்கிறார்கள்.  டீ மற்றும் காபியில் உள்ள கஃபைன் மூளை தசைகளை சுறுசுறுப்பாக்கி விடுகிறது.  மேலும் நரம்பு மண்டலத்தையும் தூண்டி உங்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கிறது.  டீ குடிப்பதால் சில ஆரோக்கிய நன்மைகளும் உண்டு.  அவற்றை அறிவீர்களா நீங்கள்??

தொண்டை கரகரப்பு: 
டீ குடிக்கும்போது அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து குடித்தால் தொண்டை வலி, கரகரப்பு, வீக்கம், இருமல் போன்றவை குணமாகும்.  மேலும் இதுபோன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழித்துவிடும்.  
 

7oagluc8

 மலச்சிக்கல்: 
டீ தயாரித்தவுடன் அதில் ஒரு தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து குடித்தால் செரிமான மண்டலம் சீராக இருக்கும்.  மேலும் குடல் இயக்கங்களும் சீராக இருக்கும்.  வெண்ணெய் சேர்ப்பதால் வயிற்றில் அமில சுரப்பு குறைந்துவிடும்.  மேலும் நெஞ்செரிச்சல் போன்ற உடல் உபாதைகள் சரியாகும்.  


hdhifgng

 சளி: 
டீ தயாரிப்பின் போது 5 -6 துளசி இலைகளை சேர்த்து கொண்டால் சளி, மூக்கு ஒழுகுதல் போன்றவை குணமாகும்.  இதில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருப்பதால் சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபடலாம். 


basil leaves

 

Listen to the latest songs, only on JioSaavn.com

வயிற்று வலி: 
மாதவிடாய் காரணமாக வயிற்று வலி ஏற்பட்டால் அரை தேக்கரண்டி சோம்பு எடுத்து டீயில் போட்டு குடிக்கலாம்.  இப்படி செய்து வந்தால் வயிற்று வலி நொடியில் குணமாகிவிடும்.  
உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement