நீரிழிவு நோய் இருப்பவர்களும் இவைகளை பயப்படாமல் சாப்பிடலாம்

Shubham Bhatnagar  |  Updated: July 26, 2018 18:26 IST

Reddit
Ayurveda For Diabetes: 4 Diabetic-Friendly Recipes To Try

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இனிப்பு வகைகளை தவிர்க்க வேண்டியது அவசியம். எனினும், ஆரோக்கியமான பொருட்களை கொண்டு செய்யப்படும் இனிப்பு வகைகளை இவர்கள் எடுத்துக் கொள்ளலாம். செஃப் ஜன்மஜய், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பிரத்யேக இனிப்பு ரெசிப்பீக்களை நம்மிடம் பகிர்ந்துக் கொள்கிறார். 

பேரிச்சம்பழ மப்பின்

பேரிச்சம்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துகள் எளிதல் ஜீரணம் ஆகக் கூடியவை. அதனால், டைப் 2 நீரிழிவு நோய் உள்ளவர்கள் பேரிச்சம்பழம் எடுத்து கொள்ளலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதிக நார்ச்சத்து கொண்ட பேரிச்சம்பழங்கள், உடலுக்கு ஆரோக்கியமானது.  மேலும், இது கொழுப்புகளற்ற பழம். 

தேவையானப் பொருட்கள்

  • நெய்/ வெண்ணெய் - ¼ கப்
  • இயற்கை சர்க்கரை - 1 ¼ கப்
  • ராகி மாவு - 1 ½ கப்
  • கோதுமை மாவு - ¾ கப்
  • கார்ன் ஸ்டார்ச் - 2 தேக்கரண்டி
  • உப்பு - 1 ½ தேக்கரண்டி
  • ஏலக்காய் பொடி - 1 ½ தேக்கரண்டி
  • பேக்கிங் பொடி - 2 தேக்கரண்டி
  • பேக்கிங் சோடா - ½ தேக்கரண்டி
  • மோர் - 1 கப்
  • தண்ணீர் - ½ கப்
  • நறுக்கிய பேரிச்சம்பழம் - 1 கப்
  • பசுங்கொட்டை - 1 கப்

செய்முறை

  • 180 டிகிரி செல்சியஸ் அளவில் ஓவனை சூடு செய்யவும்
  • மப்பின் தட்டில் வெண்ணெய் தடவவும்
  • பாத்திரத்தில் சர்க்கரை, வெண்ணெய் சேர்த்து கலக்கவும்
  • ராகி மாவு, கோதுமை மாவு, கார்ன் ஸ்டார்ச், ஏலக்காய் பொடி, பேக்கிங் பொடி, பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்
  • இதனுடன் மோர் மற்றும் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். 
  • நறுக்கிய பேரிச்சம்பழங்கள், பிஸ்தா சேர்க்கவும். 
  • மப்பின் தட்டில் வைத்து, 25-30 நிமிடங்களுக்கு ஓவனில் பேக் செய்யவும். 
     
uvpv761

முந்திரி குக்கீஸ்

ஆரோக்கியமான கொழுப்புச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்ஸ் ஆகியவை கொண்ட முந்திரி பருப்புகளை உணவுகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க, ஆல்மண்டு, முந்திரி, வால்நட்ஸ், பிஸ்தா போன்ற பொருட்களை சாப்பிட வேண்டும். தினம் 4-5 முந்திரி சாப்பிடுவது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. 

தேவையானப் பொருட்கள்

  • முந்திரி பேஸ்ட் - 112 கிராம்
  • நெய் - ¾ கப்
  • இயற்கை சர்க்கரை - 1 ½ கப்
  • தயிர் - 3 தேக்கரண்டி
  • சியா விதைகள் - 20 கிராம்
  • பேக்கிங் சோடா - ½ தேக்கரண்டி
  • பேக்கிங் பொடி - 1 தேக்கரண்டி
  • வென்னிலா - 1 தேக்கரண்டி
  • ஓட்ஸ்- 1 ¾ கப்
  • கோதுமை மாவு - 2 கப்

செய்முறை

  • கோதுமை மாவை தவிர்த்து, மற்ற பொருட்களை பாத்திரத்தில் சேர்த்து கலக்கவும்
  • குக்கீ மாவு போன்ற பதம் வரும் வரை, தேவையான அளவு கோதுமை மாவு சேர்த்துக் கொள்ளவும். 
  • கலந்த மாவை குளிர்சாதன பெட்டியில் 1 மணி நேரம் வைக்கவும்
  • 160 டிகிரி செல்சியஸில்  மைக்ரோவேவ் ஒவனை சூடு செய்யவும்
  • மாவை உருண்டை பிடித்து, குக்கீ பேப்பரில் வைக்கவும்.
  • 10-12 நிமிடங்கள் பேக் செய்ய வேண்டும்
  • பின், ஒவனில் இருந்து எடுத்து, குக்கீ தயாராகும் வரை குளிர்ச்சி படுத்தவும்

kv5vvgb4

துவரம் பருப்பு டெஸர்ட் 

புரதச்சத்து, நார்ச்சத்து அதிகம் நிறைந்த துவரம் பருப்பு உடலுக்கு ஆரோக்கியமானது. 100 கிராம் பருப்பில், 15 கிராம் நார்ச்சத்தும், 18 கிராம் புரதச்சத்தும் உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

தேவையானப் பொருட்கள்

  • ஊறவைத்த முழு துவரம் பருப்பு - 1 கப்
  • நெய் - 4 தேக்கரண்டி
  • திராட்சை - 1 தேக்கரண்டி
  • பால் - 400 மிலி
  • வெல்லம் - 1 கப்
  • ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி
  • ஆல்மண்டு- 10

செய்முறை

  • ஊறவைத்த துவரம் பருப்பை அரைத்து எடுத்து கொள்ளவும்
  • மாவுடன் நெய் சேர்த்து வதக்கவும். பின்னர், திராட்சை, ஏலக்காய் பொடி, சர்க்கரை சேர்க்கவும்
  • பாத்திரத்தில் மாவை, பால் சேர்த்து கொதிக்க வைக்கவும்
  • நட்ஸ் சேர்த்து பரிமாறவும்
ho78jtto

மசாலா தட்கா

ஆயூர்வேத கலவைகள் கொண்டு தயாரிக்கப்படும் ஆரோக்கியமான உணவு பொருட்கள் சாப்பிடுவதால், உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியும். 

தேவையானப் பொருட்கள்

  • மஞ்சள் - 1 தேக்கரண்டி
  • கொத்தமல்லி - 3 தேக்கரண்டி
  • சீரகம் - 2 தேக்கரண்டி
  • பெருஞ்சீரகம் - 4 தேக்கரண்டி

செய்முறை

  • மசாலா பொருட்களை கலந்து பாத்திரத்தில் வைக்கவும்
  • கடாயில், சிறிதளவு நெய் சேர்த்து, சூடாக்கவும்
  • மசாலா பொருட்களை இதில் வதக்கவும்
  • தேவையான அளவு உப்பு, மிளகு சேர்த்து கொள்ளவும்
  • இறுதியாக தாளித்து கொட்டி 1 நிமிடம் விடவும். 


About Shubham BhatnagarYou can often find Shubham at a small authentic Chinese or Italian restaurant sampling exotic foods and sipping a glass of wine, but he will wolf down a plate of piping hot samosas with equal gusto. However, his love for homemade food trumps all.

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement