இரத்த சர்க்கரையை குறைக்க வெண்டைக்காய் சாப்பிடலாம்!!

எண்ணெய் மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து வெண்டைக்காயை தயாரிக்கலாம்.  இத்துடன் தயிர் சேர்த்து ருசியான ரெசிபியாக தயாரிக்கலாம். 

Edited by: Kamala Thavanidhi  |  Updated: September 19, 2019 17:45 IST

Reddit
Diabetes Diet: Bhindi May Help Manage Blood Sugar, 5 Fun Ways To Include Bhindi In Your Diet

நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை நிறைந்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.  இவற்றை தவிர்த்து, காய்கறிகள், பழங்கள், முழுதானியங்கள், புரதம் நிறைந்த உணவுகள் போன்றவற்றை சாப்பிட்டு வரலாம்.  நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவு வெண்டைக்காய்.  வெண்டைக்காயில் க்ளைசமிக் இண்டெக்ஸ் குறைவாக இருப்பதால் இரத்த சர்க்கரையை சீராக வைக்கும்.  வெண்டைக்காயில் நார்ச்சத்து, வைட்டமின் பி6, ஃபோலேட், வைட்டமின் பி போன்ற சத்துக்கள் இருக்கிறது.  இரத்த சர்க்கரையை குறைக்க சில எளிய வழிமுறைகள் உண்டு.  அவை என்னவென்று பார்ப்போம். 

வெண்டைக்காய் நீர்:

சில வெண்டைக்காய்களை எடுத்து, சுத்தமாக கழுவி, சிறு துண்டுகளாக வெட்டி தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்கவும்.  தினமும் இந்த நீரை காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இரத்த சர்க்கரை சீராக இருக்கும். 

வெண்டைக்காய் சாலட்:

வெண்டைக்காய் கொண்டு சாலட் தயாரித்து சாப்பிடலாம்.  கொண்டைக்கடலையில் புரதம் நிறைந்திருக்கிறது.  கொண்டைக்கடலை, புதினா மற்றும் வெண்டைக்காய் சேர்த்து ருசியான சாலட் செய்து சாப்பிடலாம்.  இதில் புதினா சேர்ப்பதால் புத்துணர்வாக இருக்க முடியும்.  இந்த சாலட்டில் நார்ச்சத்து இருக்கிறது. வெண்டைக்காய் சூப்:

வெண்டைக்காய் சேர்த்து சூப் வைத்தால் சூப் சுவையாக இருக்கும்.  வெண்டைக்காய், குடைமிளகாய், தக்காளி சேர்த்து தயாரிக்கலாம்.  வெண்டைக்காய் சேர்ப்பதால் இயற்கையாகவே சூப் கெட்டியாக இருக்கும். g1pd179g

கிரில்டு வெண்டைக்காய்:

வெண்டைக்காயை எலுமிச்சை சாறு மற்றும் மூலிகை மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து கிரில் செய்து சாப்பிடலாம்.  வெண்டைக்காயை ஆலிவ் எண்ணெய் சேர்த்து சுவையாக தயாரிக்கலாம். தயிர் வெண்டைக்காய்:

எண்ணெய் மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து வெண்டைக்காயை தயாரிக்கலாம்.  இத்துடன் தயிர் சேர்த்து ருசியான ரெசிபியாக தயாரிக்கலாம். Listen to the latest songs, only on JioSaavn.com 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
Tags:  DiabetesOkra

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement