ஆட்டிசம் பாதிப்பை ஏற்படுத்தும் துரித உணவுகள் !!

கர்ப்ப காலத்தில் இதுபோன்ற துரித உணவுகளை சாப்பிடுவதால் கருவில் இருக்கும் குழந்தை ஆட்டிசம் நோயால் பாதிக்கப்படும் என்று தகவல் வெளியானது.  

Translated by: Kamala Thavanidhi  |  Updated: June 22, 2019 14:57 IST

Reddit
Beware! Eating Junk Food During Pregnancy May Up Risk Of Autism In Kids, Says Study

நம் அன்றாட வாழ்வில் நாம் சாப்பிடக்கூடிய உணவுகள் எல்லாமே இரசாயனங்கள் மிகுந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளாக மாறிவிட்டது.  இப்படியாக கிடைக்கக்கூடிய ரெடிமேட் உணவுகளை சாப்பிடுவதால் நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் மனநல கோளாறுகள் என அனைத்து வகையான உடல் உபாதைகளும் ஏற்பட ஆரம்பித்துவிட்டது.  மைக்ரோவேவ் அவனில் சமைக்கப்பட்ட உணவுகள், பிரட், பீட்சா, கேக், குக்கீஸ் மற்றும் குளிர்பானங்கள் போன்ற பேக்டு உணவுகள் உடலில் ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.  சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றி, கர்ப்ப காலத்தில் இதுபோன்ற துரித உணவுகளை சாப்பிடுவதால் கருவில் இருக்கும் குழந்தை ஆட்டிசம் நோயால் பாதிக்கப்படும் என்று தகவல் வெளியானது.  

துரித உணவுகளில் ப்ரோபையோனிக் அமிலம் நிறைந்துள்ளது.  இந்த அமிலம் கருவில் இருக்கும் குழந்தையின் நரம்பு மண்டலத்தை பாதிக்கும்.   ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தையின் மலத்தை பரிசோதனை செய்ததில் இந்த ப்ரோபையோனிக் அமிலம் அதிகமாக இருப்பது சோதனையில் தெரிய வந்தது.  மேலும் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடல் பகுதியில் இருக்கக்கூடிய மைக்ரோபையோம் மற்ற குழந்தைகளை காட்டிலும் மாறுபட்டதாக இருக்கிறதாம்.  இந்த துரித உணவுகள் குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் செயல்பாட்டை தடுக்கிறது.  இதனால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்படுகிறது.  

கர்ப்பம் தரித்த பெண்கள் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை வீட்டிலேயே செய்து சாப்பிடுவது நல்லது.  அது தவிர்த்து கடைகளில் கிடைக்கக்கூடிய துரித உணவுகளை, பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.  அப்படி செய்வதனால் கருவில் இருக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் உடல் உபாதைகள் இல்லாமலும் பிறக்கும் என்பதில் ஐயமில்லை.  

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement