ஹைதராபாத் தம் சாய் குடித்ததுண்டா??

மசாலா தேநீர் முதல் கட்டஞ்சாயா வரை எல்லாமே நம்மில் பலருக்கும் ஆல் டைம் ஃபேவரைட். 

Translated by: Kamala Thavanidhi  |  Updated: August 12, 2019 12:49 IST

Reddit
Move Over Dum Pukht Biryani and Gosht: Hyderabadi 'Dum ki Chai' is What You Need!
Highlights
  • உலக மக்கள் அனைவராலும் தேநீர் விரும்பி குடிக்கப்படுகிறது.
  • ஏலக்காய் மற்றும் இஞ்சி ஆகியவை சேர்த்து தேநீர் தயாரிக்கலாம்.
  • ஹைதராபாத் தம் சாய் பிரபலமானது.

தேநீர் என்ற சொல் மீது பெரும் காதல் கொண்டவர்களும் நம்மில் உண்டு.  ஒவ்வொரு நாளும் தேநீர் இன்றி நிறைவடைவதில்லை.  மசாலா தேநீர் முதல் கட்டஞ்சாயா வரை எல்லாமே நம்மில் பலருக்கும் ஆல் டைம் ஃபேவரைட்.  மேலும் சிலர் சாப்பாட்டை முற்றிலுமாக தவிர்த்து தேநீர் மட்டுமே குடித்து உயிர் வாழவும் செய்கிறார்கள்.  பொதுவாகவே, பிரியாணி என்றால் எல்லோர் நினைவிற்கும் வருவது ஹைதராபாத் பிரியாணி.  அதேபோல, தேநீர் என்றாலும் ஹைதராபாத் தம் கி சாய் தான் நினைவிற்கு வரும்.  இதன் ருசி அலாதியானது.  இதன் தயாரிப்பு முறை என்னவென்று பார்ப்போம்.    

தம் பிரியாணியின் செய்முறை போலவே தான் தம் சாயும் தயாரிக்கப்படுகிறது.  தேயிலை மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து மிதமான சூட்டில் வைத்து கணமானவை கொண்டு மூடப்பட்டு தயாரிக்கப்படும்போது தான் அதன் நறுமணம் மற்றும் ருசி அருமையாக இருக்கும்.  பால், பச்சை ஏலக்காய் அல்லது இஞ்சி மற்றும் டி தூள் ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது.  

தம் சாய் தயாரிப்பில், பால் 5-6 மணி நேரம் கொதிக்கவிடப்படுகிறது.  இதனால் பாலின் அடர்த்தி அதிகரிக்கும்.  பால் ஏடு வரும்வரை கொதிக்க வைக்கப்படுகிறது.  பின் வழக்கம்போல தேநீர் தயாரிக்கப்பட்டு இனிப்பு சேர்த்து வழங்கப்படுகிறது.  Listen to the latest songs, only on JioSaavn.com


இந்த முறையில் தயாரிக்கப்படுவதால் தேநீர் மிகவும் கெட்டியாகவும், க்ரீமியாகவும் இருக்கும்.  இதனை நீங்கள் வீட்டிலேயே தயாரித்து பார்க்கலாம்.  க்ரீம் பால், சர்க்கரை, தேயிலை, தண்ணீர், ஏலக்காய் மற்றும் இஞ்சி ஆகியவை சேர்த்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை மூடி வைக்கவும்.   பின் இந்த அருமையான ருசியுடைய தேநீரை சூடாக பருகலாம்.   

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement