உருளைக்கிழங்கை மிக எளிதில் வேக வைப்பது எப்படி??

பெரும்பாலான உணவுகளில் உருளைக்கிழங்கு வேக வைத்து பயன்படுத்தப்படுகிறது.  வேக வைத்து சாப்பிடுவதால் ஸ்டார்ச் அளவு குறைகிறது. 

  | Translated by: Kamala Thavanidhi  |  Updated: June 25, 2019 15:35 IST

Reddit
Indian Cooking Hacks: How To Boil Potatoes Faster Without Any Fuss
Highlights
  • வேக வைத்த உருளைக்கிழங்கை கொண்டு நிறைய ரெசிபிகள் செய்யலாம்.
  • உருளைக்கிழங்கை வேகவைக்கும் போது ஸ்டார்ச் அளவு குறைகிறது.
  • உருளைக்கிழங்கை வேக வைக்க நிறைய வழிகள் உண்டு.

 உருளைக்கிழங்கு எல்லா பருவ காலத்திலும் எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்று.  கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளில் உருளைக்கிழங்கும் ஒன்று.  இதனை கறி, பராத்தா, சாலட், சாட் மற்றும் சாண்ட் விச் போன்ற உணவுகளில் உருளைக்கிழங்கு பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.  பெரும்பாலான உணவுகளில் உருளைக்கிழங்கு வேக வைத்து பயன்படுத்தப்படுகிறது.  வேக வைத்து சாப்பிடுவதால் ஸ்டார்ச் அளவு குறைகிறது.  வேக வைத்த உருளைக்கிழங்கு கொண்டு தான் ஆலு பராத்தா தயாரிக்கப்படுகிறது.  ஆனால் இங்கு உருளைக்கிழங்கை வேக வைப்பதில் தான் சிக்கல் உள்ளது.  குக்கரில் உருளைக்கிழங்கை 20 நிமிடங்கள் முதல் அரை மணி நேரம் வரை வைத்து வேக வைக்கலாம்.  இந்த 20 நிமிடங்களே அதிகம் என்றால் இந்த எளிய குறிப்பை பயன்படுத்தி உருளைக்கிழங்கை வேக வைக்கலாம்.  

hufiejn8

 

உருளைக்கிழங்கை சுத்தமாக கழுவி, மைக்ரோவேவ் அவனில் வைக்கவும்.  பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 2 முதல் 3 நிமிடங்கள் வரை வைத்து எடுக்கவும்.  அடுப்பில் வைத்து வேக வைத்தது போலவே கிடைக்கும்.  

உருளைக்கிழங்கை ஃபோர்க் கொண்டு ஆங்காங்கு குத்தி வேக வைத்தால் மிக எளிதில் வெந்துவிடும்.  ஆனால் அதன் தோல் உறிக்க தேவையில்லை.  

நறுக்கிய உருளைக்கிழங்கை பயன்படுத்துவது என்று எண்ணினால், உருளைக்கிழங்கை தோல் நீக்கி நறுக்கி வேக வைக்கவும்.  இப்படி செய்தால் விரைவில் வெந்துவிடும்.  

உங்களிடம் மைக்ரோவேவ் அவன் இல்லையென்றால் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.  மற்றொரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கை போட்டு அதில் இந்த கொதிக்கும் நீரை ஊற்றவும்.  சில நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து, பின் மீண்டும் அதே பாத்திரத்தை அடுப்பில் வைத்து கொதிக்க விட்டால் உருளைக்கிழங்கு அதிவிரைவில் வெந்துவிடும்.  இதில் முழு உருளைக்கிழங்கு அல்லது தோல் நீக்கியது அல்லது நறுக்கியது என எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.  

Listen to the latest songs, only on JioSaavn.com

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement