ப்ளாக் ஹெட்ஸை போக்கும் சூப்பர் ஸ்க்ரப்!!!

ஓட்ஸ், சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி சுத்தம் செய்யும்.  மேலும் முகத்தில் உள்ள அதிகபடியான எண்ணெயை அகற்றிவிடும். 

   |  Updated: April 08, 2019 12:14 IST

Reddit
How To Remove Blackheads? Try This Wonder Scrub Made Using Kitchen Ingredients

ஆரோக்கியமான, பளபளக்கும் சருமத்தை யார் தான் விரும்ப மாட்டார்கள்? சருமத்தை பொலிவாக வைத்து கொள்ள நான் உண்ணும் உணவுக்கு பெரும்பங்கு உண்டு.  அதேபோல சருமம் பிரகாசமாக இருக்க நாம் தொடர்ச்சியாக சரும பராமரிப்பில் ஈடுப்படுவது அவசியம்.  குறிப்பாக ஆயிலி ஸ்கின் உள்ளவர்கள் சருமத்தை பளிச்சென்று வைத்து கொள்ள பெரிதளவு மெனக்கெட வேண்டும்.  ஆயிலி ஸ்கின் உள்ளவர்களை தான் பருக்கள், ப்ளாக் ஹெட்ஸ், ஒயிட் ஹெட்ஸ் மற்றும் கரும்புள்ளிகள் அதிகம் தாக்கும்.  இந்த ப்ளாக் ஹெட்ஸ் மற்றும் ஒயிட் ஹெட்ஸ் முகத்தின் அழகையே கெடுத்துவிடும்.  மேலும் சருமத்தை சொரசொரப்பாக மாற்றிவிடும்.  மூக்கு, தாடை, கன்னம் போன்ற இடங்களில் தான் இந்த ப்ளாக் ஹெட்ஸ் அதிகம் உருவாகும்.  இதனை போக்க நீங்கள் பார்லருக்கு சென்று பெரும் தொகையை செலவிட வேண்டாம்.  வீட்டிலேயே சில எளிய பொருட்களை வைத்து ப்ளாக் ஹெட்ஸை போக்கி சருமத்தை அழகாக்கிடுங்கள். 

தேவையான பொருட்கள்

வாழைப்பழம் – 1

ஓட்ஸ் – 2 மேஜைக்கரண்டி

தேன் – 1 மேஜைக்கரண்டி

செய்முறை

Listen to the latest songs, only on JioSaavn.com

வாழைப்பழத்தை நன்கு மசித்து வைத்து கொள்ளவும்.  அதேபோல ஓட்ஸை பொடித்து கொள்ளவும்.  ஒரு பௌலில் பொடித்து வைத்த ஓட்ஸ் சேர்த்து அத்துடன் தேன் மற்றும் மசித்து வைத்த வாழைப்பழத்தை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.  இந்த கலவையை முகத்தில் தடவி, நன்கு மசாஜ் செய்யவும்.  தொடர்ந்து 5 முதல் 7 நிமிடங்கள் வரை இந்த கலவையை கொண்டு ஸ்க்ரப் செய்து பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விடவும். பிறகு உங்கள் சருமத்திற்கு ஏற்ற மாய்சுரைசர் பயன்படுத்தலாம்.  இது சருமத்தில் உள்ள துளைகளை மூட உதவும்.  வாரத்தில் இரண்டு முறை இப்படி செய்து வந்தால் முகத்தில் உள்ள ப்ளாக் ஹெட்ஸ் மறைந்து முகம் பிரகாசிக்கும்.

ஓட்ஸ், சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி சுத்தம் செய்யும்.  மேலும் முகத்தில் உள்ள அதிகபடியான எண்ணெயை அகற்றிவிடும்.  தேனில் ஆண்டிபாக்டீரியல் மற்றும் ஆண்டி-மைக்ரோபியல் தன்மை உள்ளது. இது சருமத்திற்கு சிறந்த மாய்சுரைசராக செயல்படும்.  வாழைப்பழமும் சருமத்தை மாய்சுரைஸ் செய்து முகத்திலுள்ள அழுக்குகளை அகற்றி மென்மையாக வைத்திருக்கும்.  ஆயிலி ஸ்கின் உள்ளவர்களுக்கு இந்த ஸ்க்ரப் மிகவும் நல்லது. 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement