உடல் எடை குறைக்கக்கூடிய மேஜிக் ரெசிபி இதுதான்!!

எப்போதுமே பழச்சாறுகளை தவிர்த்து முழு பழமாக சாப்பிடுவதே உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதென்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Translated by: Kamala Thavanidhi  |  Updated: July 17, 2019 12:04 IST

Reddit
On A Weight Loss Diet? This Low-Cal Cucumber-Kiwi Juice Could Prove To Be A Magic Potion
Highlights
  • உடல் எடை குறைப்பென்பது சவாலான விஷயமாக இருக்கிறது.
  • வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து,ஆண்டிஆக்ஸிடண்ட், தாதுக்கள் இருக்கிறது.
  • 100 கிராம் வெள்ளரியில் 16 கலோரிகள் இருக்கின்றன.

உடல் எடை குறைக்க கடுமையான உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியம்.  உடல் எடை குறைக்க நீங்கள் முதலில் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.  பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்.  சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்டிருக்கும் உணவுகளை தவிர்த்து முழு தானியங்களை சேர்த்து கொள்ள வேண்டும்.  சோடா, குளிர்பானங்கள், மார்கெட்களில் கிடைக்கும் பழச்சாறுகள் போன்றவற்றில் செயற்கை இனிப்பூக்கிகள் சேர்க்கப்பட்டிருக்கும் என்பதால் இதனை தவிர்ப்பது மிகவும் நல்லது. 

q7e0fruo
 

எப்போதுமே பழச்சாறுகளை தவிர்த்து முழு பழமாக சாப்பிடுவதே உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதென்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.  பழங்களை அரைப்பதனால் உடல் எடை குறைக்க பயன்படும் நார்ச்சத்துக்கள் கிடைக்காமல் போகிறது.  வீட்டிலேயே பழங்களை அரைத்து ஆனால் வடிகட்டாமல் குடித்து வரலாம்.  அப்படி உடல் எடை குறைக்க நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்த பழங்களை கொண்டு எப்படி பழச்சாறு தயாரிக்கலாம் என்று பார்க்கலாம். வெள்ளரி மற்றும் கிவி:

கோடைக்காலத்தில் கிடைக்கக்கூடிய பழங்களுள் வெள்ளரியும் ஒன்று.  இதில் நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து அதிகமாக இருக்கிறது.  96 சதவிகிதம் நீர்ச்சத்து நிறைந்த இந்த வெள்ளரியில் குளிர்ச்சி தன்மை அதிகமாக இருக்கிறது.  100 கிராம் வெள்ளரியில் 16 கலோரிகளே உள்ளது.  அதேபோல கிவி பழத்தில் ஆண்டிஆக்ஸிடண்ட், வைட்டமின் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது.  இது இரத்த சர்க்கரையை சீராக வைக்க உதவுகிறது.  கிவி பழத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பு சத்து துளியும் இல்லாத காரணத்தால் உடல் எடை குறைக்க இந்த பழத்தை சாப்பிடலாம். காலை நேரத்தில் வெள்ளரி மற்றும் கிவி சாறு குடித்து வரலாம்.  இதனை குடிப்பதால் உடல் புத்துணர்வோடு இருக்கும்.  உடலுக்கு நீர்ச்சத்து நார்ச்சத்தும் ஒருங்கே கிடைக்கும்போது உடல் எடை தானாக குறையும்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement