உடல் எடை குறைக்க மாம்பழ சாலட் சாப்பிடலாம்!!

மாம்பழத்தில் கொழுப்பு சத்து துளி அளவும் கிடையாது.  கோடைக் காலத்தில் தினமும் மாங்காய் அல்லது மாம்பழம் சாப்பிட்டு வரலாம். 

   | Translated by: Kamala Thavanidhi  |  Updated: June 26, 2019 13:20 IST

Reddit
Weight Loss: This Raw Mango Salad Is An Ideal Weight-Loss-Friendly Dinner You Can Try This Summer!
Highlights
  • கோடைக்காலம் என்பது மாம்பழத்திற்கான காலம்.
  • மாம்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
  • ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் வைட்டமின்கள் அடங்கியது மாம்பழம்.

மாம்பழம் இல்லாமல் கோடைக்காலம் நிறைவு பெறாது.  மாங்காய், மாம்பழம் என இரண்டுமே ருசியில் அலாதியானது.  இதனை கொண்டு ஊறுகாய், சட்னி, சாலட், ஸ்மூத்தி, மில்க் ஷேக், ஐஸ்கிரீம் போன்ற ரெசிபிகளை செய்யலாம்.  மாம்பழத்தில் ஆண்டிஆக்ஸிடண்ட், வைட்டமின், தாதுக்கள் ஆகியவை இருப்பதால் உடலுக்கு நன்மை பயக்கிறது.  இத்துடன் சிறிதளவு மசாலா பொருட்கள் தூவி, “கச்சி கைரி” என்ற பெயரில் மகாராஸ்டிரத்தில் கொடுக்கப்படுகிறது.  இதன் ருசிக்கு மகாராஸ்டிரத்தினர் அடிமையாகி கிடக்கின்றனர்.  ஐஸ், எலுமிச்சை, புதினா ஆகியவை சேர்த்து சட்னி செய்து அதனை பராத்தாவுடன் சேர்த்து சாப்பிடலாம்.  கோடையில் உங்கள் தாகம் தணிக்க ஆம் பானா செய்து குடிக்கலாம்.  மாம்பழத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கிறது.  உடல் எடை குறைக்க மாம்பழத்தை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.   

Newsbeep
raw mango pickle
  

* மாங்காய் மற்றும் மாம்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது.  இந்த நார்ச்சத்து செரிமான மண்டலத்தை சீராக வைக்கிறது.  நார்ச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடுவதால் நீங்கள் நாள்முழுக்க நிறைவாக உணர்வீர்கள்.  அத்துடன் பசி உணர்வு இல்லாமல் இருக்கும்.  

* மாம்பழத்தில் கொழுப்பு சத்து துளி அளவும் கிடையாது.  கோடைக் காலத்தில் தினமும் மாங்காய் அல்லது மாம்பழம் சாப்பிட்டு வரலாம். 

Listen to the latest songs, only on JioSaavn.com

* செரிமானத்தை சீராக்கி, உடல் எடை குறைக்க மாம்பழம் பெரிதும் உதவுகிறது.  உடலில் மெட்டபாலிசம் தாமதமாக இருந்தால் செரிமானமும் சீராக இருக்காது.  மாம்பழம் சாப்பிடுவதால் மெட்டபாலிசம் அதிகரித்து உடல் எடையும் விரைவில் குறைகிறது.  

* மாம்பழத்துடன் சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை எதையும் சேர்க்க வேண்டாம்.  மாங்காய், வெங்காயம், மிளகாய், புதினா மற்றும் லீட்யூஸ் சேர்த்து சாலட் செய்து சாப்பிடலாம்.  ருசியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.  

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement