சாப்பிட வருபவர்களை நடுவர்களாக அழைக்கிறது இந்த ரெஸ்டாரெண்ட்

சென்னை மஹாபலிபுரத்தில் உள்ள இன்டர் கான்டினென்டல் ரெசார்ட்டில், ஒரு சிறப்பு டிரீட் காத்திருக்கிறது

NDTV Food  |  Updated: September 10, 2018 18:24 IST

Reddit
This Restaurants asks customers to taste and rate dishes that are to be included in their New menu

சென்னை மஹாபலிபுரத்தில் உள்ள இன்டர் கான்டினென்டல் ரெசார்ட்டில், ஒரு சிறப்பு டிரீட் காத்திருக்கிறது. அந்த ரெசார்ட்டின் மார்க்கெட் கஃபே ரெஸ்டாரென்ட்டில், புதிய உணவு வகைகளை மெனுவில் சேர்க்க இருக்கின்றனர். ஆனால் எதைச் சேர்ப்பது என்பதில் அவர்களுக்கு ஒரு குழப்பம். இதை தீர்த்து வைக்கத் தான் உங்களை அழைக்கின்றனர்.

உள்ளூர் முதல் உலக அளவில், பல உணவு வகைகளை தயார் செய்து, வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து சுவைக்கச் செய்கின்றனர். அதில் எவை எல்லாம் சிறப்பாக உள்ளது என்று வாடிக்கையாளர்கள் நினைக்கிறார்களோ, அவற்றுக்கு ரேட்டிங் கொடுக்க வேண்டும். அதிக ரேட்டிங் பெறும் உணவு வகைகள், மார்க்கெட் கஃபேவின் புதிய மெனுவில் சேர்க்கப்படும்.

நீங்கள் தேர்ந்தெடுக்கும், உணவு மெனுவில் இடம் பெற்றால், அக்டோபர் மாதம் வரை மீல்ஸில் 25% தள்ளுபடி பரிசாக கிடைக்கும்.இந்த சிறப்பு ட்ரீட் தற்போது நடந்து வருகிறது. செப்டம்பர் 30-ம் தேதி வரை நடை பெற இருக்கிறது.
 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com