திருநெல்வேலி அல்வா: தமிழகத்தின் புகழ்பெற்ற சிவப்பு கோதுமை அல்வா

Ashwin Rajagopalan  |  Updated: August 24, 2018 21:37 IST

Reddit
Tirunelveli Halwa: Tamil Nadu's Legendary Red Wheat Halwa You Need to Try

திருநெல்வேலி இருட்டு கடை அல்வா உலகப்புகழ் பெற்றது. இந்த சுவைக்கு நிகர் வேறேதும் இல்லை.

தேவையான பொருட்கள்:

  • கோதுமை பால் (சாறு): 1 கப்
  • சர்க்கரை: 2 கப்
  • நெய்: 3 கப்
  • குங்குமப்பூ இலைகள்
  • நறுக்கப்பட்ட பாதாம் / முந்திரி / பிஸ்டா
  • குங்குமப்பூ உணவு வண்ணம்: ஒரு சில துளிகள்


 செய்முறை:

1.ஆறு மணி நேரம் தண்ணீரில் உடைந்த கோதுமை (டாக்லியா) ஊறவைத்து நன்றாக அரைக்கவும்
2.ஒரு மென்மையான / மஸ்லின் துணியில் வேகவைத்த கோதுமையை போட்டு பிழிந்து பால் எடுக்கவும்
3.ஒரு இரவு முழுவதும் அதை வைக்கவும்
4.மறுநாள் அதிலிருக்கும் நீரை வடிகட்டி, கெட்டியான பாலை வைத்துக்கொள்ளவும்
5.ஒரு கடாயில் வடித்த பால் மற்றும் சர்க்கரை ஒன்றாக சேர்த்து ஒரு கடாயில் கொதிக்கவைக்கவும்
6.ஒரு கப் கொதிக்கும் நீர் மற்றும் நெய் ஒரு கப் சேர்க்கவும். குங்குமப்பூ உணவு வண்ணத்தின் சில துளிகள் சேர்க்கவும் .எலுமிச்சை சாறு ஒரு சில துளிகள் சேர்க்கலாம்.
7. மிதமான சூட்டில் வைத்து நன்கு கிளறி விடவும், மீதமுள்ள நெய் மெதுவாக சேர்க்கவும் (இந்த செயல்முறை உங்களுக்கு ஒரு மணி நேரம் ஆகும்)
8. இந்த கலவை பாத்திரத்தின் ஓரத்தில் ஒட்டாமல் தனியே வரும். அப்டி வரும் வரை மிதமான சூட்டில் கிளறவும். அது வந்துவிட்டால் உங்கள் சுவையான கோதி அல்லவா தயார் என்று அர்த்தம்.
9.தேவையென்றால் கூடுதல் நெய்யை நீக்கிக்கொள்ளம்
10.நெய் தடவப்பட்ட ஒரு தட்டில் ஊற்றவும், குங்குமப்பூ மற்றும் நறுக்கப்பட்ட நட்ஸ் சேர்க்கவும் பிறகு பரிமாறவும்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement