இந்தியப் பாதுகாப்பு படையினரை கொண்டாடும் தாஜ்! சுதந்திர தின ஸ்பெஷல்!

NDTV Food  |  Updated: August 15, 2018 07:44 IST

Reddit
Independence Day Taj Hotel Offers/Discounts

இந்த வருடம் ஆகஸ்டு 15 ஆம் தேதி, 72வது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாட உள்ளது. சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தி இந்தியன் ஹோட்டல் நிறுவனம் சார்பில் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பழம்பெரும் தாஜ் குழுவை சேர்ந்த ஹோட்டல்களில், ஓய்வு பெற்ற இந்திய பாதுகாப்பு படை வீரர்களுக்கு சுதந்திர தின சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.

சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்ட, இந்திய நாட்டின் பாதுகாப்பிற்காக பங்களித்து ஓய்வு பெற்ற பாதுகாப்பு படை வீரர்களின் ஒப்பற்ற செயல்களை கவுரவிக்கும் வகையில், சுதந்திர தின பிரத்யேக சலுகைகளை தாஜ் குழுமம் வழங்கியுள்ளது.

3uqjgh1o

இந்தியப் பாதுகாப்பு படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற வீரர்களுக்கு, 90க்கும் மேற்பட்ட தாஜ், விவந்தா ஹோட்டல்களில் 50% தள்ளுபடியும், 90க்கும் மேற்பட்ட ஆல் டே டின்னரில் உணவு, குளிர்பானங்களுக்கு 50% சலுகையும் அறிவித்துள்ளது.

குறிப்பாக, 40க்கும் மேற்பட்ட ஜீவா ஸ்பாக்களில் 25% தள்ளுபடி அளித்துள்ளது. மேலும், தாஜ் கசானா லைப்-ஸ்டைல் ஸ்டோரில் 10% தள்ளுபடி வழங்கியுள்ளது.

இந்த அதிரடி சலுகைகள், ஆகஸ்டு மாதம் 13 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை பயன்பாட்டில் உள்ளன. மேலும் விவரங்களுக்கு www.tajhotels.com இணையதளத்தை அனுகவும்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement