நீங்கள் கட்டாயமாக ருசித்திருக்க வேண்டிய கேரள உணவுகள்!

உங்கள் வாழ்வில் தவறாமல் நீங்கள் ருசித்திருக்க வேண்டிய சில உணவுகளை பார்க்கலாம்

एनडीटीवी फूड डेस्क  |  Updated: December 31, 2018 17:28 IST

Reddit
Kerala's Most Delicious Breakfast Dishes You Must Try

இயற்கையின் அழகு மற்றும் தேங்காய் எண்ணெய் வாசனை வீசும் உணவுக்கு பெயர் போனது கேரள மாநிலம். ஒவ்வொரு ஊரிலுமே ஒவ்வொரு உணவு வகை பாரம்பரியமானதாகவும் பிரத்யேகமானதாகவும் இருக்கும். அப்படி கேரளாவிற்கென்றே சில உணவுகள் உண்டு. உங்கள் வாழ்வில் தவறாமல் நீங்கள் ருசித்திருக்க வேண்டிய சில உணவுகளை பார்க்கலாம்.

1. கறிக்கு தோசை

இளநீர், தேங்காய் எண்ணெய், அரிசி, இனிப்பு மற்றும் உப்பு சேர்த்து தயாரிக்கப்படும் இந்த பேன்கேக் மிகவும் ருசியானதாக இருக்கும். இதனை தக்காளி மற்றும் பூண்டு சேர்த்து தயாரிக்கப்படும் சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம். தோசை போல் செய்து சாப்பிட ஆரோக்கியமானதாக இருக்கும்.


 

2. புட்டு மற்றும் கடலை கறி

புட்டு மற்றும் கடலை கறி தான் கட்சிதமான பொருத்தமாக இருக்கும். கொண்டைக்கடலை, தேங்காய் எண்ணெய் மற்றும் சில மசாலா பொருட்கள் சேர்த்து செய்யப்படும் இந்த ரெசிபி புட்டுடன் சேர்த்து சாப்பிட ருசியானதாக இருக்கும். குறிப்பாக தேங்காய் சேர்க்கப்பட்டு செய்யப்படுவதால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anu (@anupamanair.wdr) on


 

3. வெள்ளையாப்பம்

சிரியன் கிருஸ்டியனின் பாரம்பரிய உணவு இது. அரிசி மாவில் செய்யப்படும் தோசையுடன் முட்டை க்ரேவி சேர்த்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும். சின்ன வெங்காயம், சீரகம் மற்றும் பூண்டு சேர்க்கப்பட்டு கெட்டியான தோசையாக செய்து சாப்பிடலாம்.
 

 

A post shared by Arathy (@arathysabarinath) on


 

4. பத்ரி

மலபார் பகுதியின் பிரத்யேகமான உணவு இது. அரிசியில் செய்யப்படும் இந்த ப்ரட்டில் மீன் அல்லது கறி மற்றும் நெய் சேர்த்து ஸ்டஃப் செய்யப்பட்டு தயாரிக்கப்படும் இந்த ரெசிபி மிகவும் ருசியானதாக இருக்கும்.

5. வட்டயாப்பம்

ஸ்நாக்ஸ்களிலே ஆரோக்கியம் நிறைந்தது இது. எண்ணெய் சேர்க்காமல் அரிசியை ஆவியில் வேகவைத்து தயாரிக்கப்படும் இந்த ரெசிபியில் ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் ஏலக்காய் சேர்க்கப்பட்டிருக்கும். இதில் தேங்காய் சேர்க்கப்படுவது தான் இதன் சிறப்பு.
 

 

A post shared by Sheen Skaria (@sheenlibra) on


 

Listen to the latest songs, only on JioSaavn.com

6. இலை அடை

வெல்லம், தேங்காய் சேர்த்து செய்யப்படும் இந்த கொழுக்கட்டை போன்ற இனிப்பு வகை வாழை இலையில் வைத்து வேகவைக்கப்படுகிறது. இதனுள் பலாப்பழத்தை வைத்து தயார் செய்வார்கள்.
 உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய சமையல்

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement